இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், சென்னை தி.நகர் நடைமேடையில் படுத்து உறங்கும் வீடியோ சமீபத்தில் வைரலானது. நடிகர் விஜயின் அப்பாவான இவர், இயக்குனராக தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி கொண்டு அதில் வெற்றி கண்டவர். அதனை அடுத்து, ‘யார் இந்த எஸ்.ஏ.சி’ (Yaar Indha SAC) என்ற யூ டியூப் சேனலை தொடங்கி அதில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதுபவர்கள் பலர். ஆனால், எஸ்ஏசி திரைப்பட இயக்குனர் என்பதால் அவர் தனது பாணியிலேயே வீடியோ வடிவில் சுயசரிதையைக் கூற முடிவு செய்துள்ளார். எனவே, புதிதாக அவர் தொடங்கி இருக்கும் யூட்யூப் சேனலில் எபிசோட்களாக வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
அந்த வரிசையில், இரண்டாவது எபிசோடில் தனது மகள் வித்யா குறித்து பேசி இருக்கிறார். தனது குடும்பத்தை பற்றி விவரிக்கும் அவர், தனக்கு இரண்டு குழந்தைகள் என குறிப்பிட்டுள்ளார். ”எங்களுக்கு விஜய், வித்யா என இரண்டு குழந்தைகள். எனது மகள் மிகவும் சுட்டி குழந்தை. அம்மாவையே பெயர் சொல்லி அழைப்பாள். விஜயை கூட டேய் அண்ணா என்றுதான் அழைப்பாள். எங்களுக்கு அவளை மிகவும் பிடிக்கும். ஆனால், எங்களைவிட கடவுளுக்கு அவளை மிகவும் பிடித்துவிட்டது போல. அவளுக்கு மூன்றரை வயது இருக்கும்போதே கடவுள் அவளை எடுத்து கொண்டார். அந்த வருத்தம் எங்களுக்குள் அதிகமாக இருந்தது. என் மனைவி இதை எப்படி தாங்கி கொண்டார், நான் என்ன செய்தேன், விஜய் எப்படி மாறினார் என்பதை அடுத்த எபிசோடில் சொல்கிறேன்” என தெரிவித்திருக்கிறார்.
வீடியோவைக் காண:
முன்னதாக வெளியான முதல் எபிசோடில், அவர் தன்னுடைய 60 ஆண்டுகால வாழ்க்கை பயணம் குறித்து பேசுகிறார். ”என்ன இங்கே உட்கார்ந்திருக்கிறேன் என்று பார்க்கிறீர்களா? அப்போது தான் அமர்ந்திருக்கும் இடத்தில் இருந்து தான் தன்னுடைய சென்னை வாழ்க்கையை தொடங்கியதாகக் கூறினார். இதே இடத்தில் 47 நாட்கள் இருந்திருக்கிறேன். சென்னைக்கு சினிமாக் கனவுடன் வந்தேன். சொந்த பந்தத்தைப் பார்க்கப் பிரியமில்லை. அதனால் சாதிக்கும் கனவுடன் இங்கு தான் தங்கியிருந்தேன். என்னுள் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற வேட்கை மட்டுமே இருந்தது. சினிமாவில் ஒரு எழுத்தாளனாக, இயக்குநராக வேண்டும் என்ற கனவை நெஞ்சிலும், கதை அடங்கிய ஃபைலை கையிலும் சுமந்து கொண்டு திரிந்து பெற்ற வாய்ப்பு. அதைப் பயன்படுத்தி வெற்றி பெற்றேன்” என தெரிவித்திருக்கிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்