சுறாவை 3 திமிங்கலங்கள் வேட்டையாடும் வீடியோ இணையவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


பொதுவாக ஆழ்கடலுக்குள் வாழும் உயிரினங்கள் குறித்த வீடியோக்கள் எப்போதும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். இதுதொடர்பாக ஏராளமான ஆய்வுகள் நடந்து வரும் நிலையில் உயிரினங்களின் வாழ்க்கை முறையும் டிஸ்கவரி போன்ற தொலைக்காட்சி சேனல்கள் மூலம் பார்வையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இதனை பலரும் விரும்பி பார்ப்பது வழக்கம். 






டிஸ்கவரி நெட்வொர்க்கின் 34-வது ஆண்டின் ஒரு பகுதியாக ஷார்க் ஹவுஸ் என்ற சுறாக்கள் குறித்த தொகுப்பு ஒளிபரப்பானது. இதற்கான படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கமான ஷார்க் வீக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் ஒரு பெரிய வெள்ளை சுறாவை 3 திமிங்கலங்கள் வேட்டையாடியுள்ளது. ரத்த வெள்ளத்தில் மிதக்கும் சுறாவின் அருகில் 2 திமிங்கலங்கள் உலா வரும் நிலையில், இன்னொரு திமிங்கலம் சுறாவின் வயிற்றை கிழித்துக் கொண்டும் வரும் காட்சிகள் ட்ரோன் மூலம்  எடுக்கப்பட்ட காட்சிகளில் பதிவாகியுள்ளது. அதன்பின்னர் திமிங்கலம் சுறாவைப் பிடித்து தண்ணீரின் கீழே இழுத்து செல்கிறது. 






இதனைப் பார்த்த தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானி அலிசன் டவுனர் இதுவரை படமாக்கப்பட்ட இயற்கை வரலாற்றின் மிக அழகான காட்சிகளில் இதுவும் ஒன்று என தெரிவித்துள்ளார். மேலும் இந்த வீடியோவைப் பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். சிலர் மோசமான திமிங்கலத்தின் அற்புதமான குழுப்பணி என கருத்து தெரிவித்துள்ளனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண