பாகிஸ்தான் பலுசிஸ்தானின் துர்பத்தில் உள்ள மைதானத்தில் கால்பந்து போட்டியின் போது பலத்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதை, பாகிஸ்தானின் ஏஆர்ஐ செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது.






இதுகுறித்து காவல்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், "குவெட்டாவில் உள்ள டர்பட் ஸ்டேடியத்திற்கு வெளியே குண்டு வெடித்ததாக சந்தேகிக்கப்படுகிறது. ஒரு போலீஸ்காரர் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்" என்றார்.


நகரின் ஏர்போர்ட் ரோட்டில் கால்பந்து மைதானத்தில் போட்டி நடந்து கொண்டிருந்த போது இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு நிகழ்வது என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. இதேபோல, ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபுலில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் உள்நாட்டு டி20 கிரிக்கெட் லீக் போட்டி நேற்று நடைபெற்றது.






இந்த போட்டிக்கு தலிபான் அரசின் முக்கிய பிரதிநிதிகளும், ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா. துணை தூதர் ராமிஸ் அலக்பரொவ் உள்பட பல்வேறு நபர்கள் வந்திருந்தனர்.


போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது மைதானத்தில் பார்வையாளர்கள் அமர்ந்திருந்த ஒரு அரங்கில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது. மைதானத்தில் இருந்த கையெறி குண்டு வெடித்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியானது.


இந்த குண்டு வெடிப்பு சம்பத்தில் மைதானத்தில் கிரிக்கெட்டை கண்டுகளித்துக்கொண்டிருந்த பார்வையாளர்கள் 4 பேர் படுகாயமடைந்தனர்.


தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ். ஹரசன் மாகாணம் பிரிவு பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக தலிபான்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண