பிரபல ஹாலிவுட் நடிகரான அன்னி வெர்ஷிங் புற்றுநோயால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானார். இதனை அவரது செய்தித் தொடர்பாளர் கிரேக் ஷ்னைடர் ஊடகங்களிடம் பகிர்ந்துகொண்டார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த வெர்ஷிங்குக்கு வயது 45. அவருக்கு அவரது கணவருடன் இரண்டு மகன்கள் உள்ளனர். அவர் பிரபல நாடகத்தொடரான  "24" தொடரில் ஏஜெண்ட் ரெனி வாக்கராக நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர்.






வெர்ஷிங்கின் கணவர் ஸ்டீபன் ஃபுல் வெளியிட்டுள்ள அறிக்கையில்:


“இந்தக் குடும்பத்தின் ஆன்மாவில் இன்று ஒரு வெற்றுத்துளை உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதை நிரப்புவதற்கான கருவிகளையும் அவள் எங்களுக்காக விட்டுச் சென்றிருக்கிறாள். எளிமையான தருணங்களில் அவள் ஆச்சரியங்களைத் தேடிக் கொண்டாள். நடனமாட அவளுக்கு இசை தேவைப்பட்டிருக்கவில்லை. சாகசத்திற்காக காத்திருக்க வேண்டாம் என்று அவள் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தாள். ‘ சாகசங்களை நீயே போய் தேடு அது எல்லா இடங்களிலும் இருக்கிறது’ என்று அவள் எங்களுக்கு கூறியிருக்கிறாள். நாங்கள் அதனைத் தேடிக் கண்டடைவோம்” என்று அவர் கூறியுள்ளார். 


அவர் இறுதியாக "தி லாஸ்ட் ஆப் அஸ்” என்கிற வீடியோ கேமுக்கு பின்னணிக் குரல் கொடுத்திருந்தார். 


 










பிரபல நடிகர்கள் மைக்கில் மலார்க்கே, எவர் கெரெடின் ஆகியோர் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.மேலும் அவரது குடும்பத்துக்கு உதவும் வகையில் நிதி திரட்டும் கோரிக்கையையும் முன்வைத்து வருகின்றனர்