சொகுசு வாகனங்களுக்கு பெயர் போன பிஎம்டபிள்யூ நிறுவனம், வாடிக்கையாளர்களை கவரும் விதமாக தனது வாகனங்களை தொடர்ந்து மேம்படுத்தி புதிய மாடலாக சந்தையில் அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிறுவனத்தின் பைக்குகளின் விலை கூடுதலாக இருந்தாலும், அதில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
அதேநேரம், விற்பனைக்கு பிறகும் வாகனத்தில் ஏதேனும் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டால், அதனை சரிசெய்து கொடுக்கும் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது. அந்த வகையில் தான் தற்போது 2 மாடல்களை சேர்ந்த, 18 ஆயிரம் வாகனங்களை ரீகால் செய்வதாக பிஎம்டபிள்யூ நிறுவனம் அறிவித்துள்ளது.
ரீகால் செய்யப்பட்ட 18,000 வாகனங்கள்:
அதன்படி, பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனம் R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் மற்றும் R 1250 RT ஆகிய மாடல்களின் தேர்வு செய்யப்பட்ட வாகனங்களை ரிகால் செய்கிறது. அந்த வகையில், 18 ஆயிரத்து 489 யூனிட்கள் ரிகால் செய்யப்பட்டு உள்ளன.
வாகன விவரங்கள்:
பிஎம்டபிள்யூ R 1250 GS மாடலை சேர்ந்த 6 ஆயித்து 812 யூனிட்களும், பிஎம்டபிள்யூ R 1250 GS அட்வென்ச்சர் மடலை சேர்ந்த 9 ஆயிரத்து 401 யூனிட்களும், மற்றும் பிஎம்டபிள்யூ R 1250 RT 2 ஆயிரத்து 276 யூனிட்களும் திரும்பப் பெறப்படுகின்றன். பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள அனைத்து வாகனங்களும் 2019 முதல் 2023-க்குள் உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும்.
காரணம் என்ன?
கியர்பாக்ஸ் இன்புட் ஷாஃப்ட் உடையும் அபாயம் ஏற்பட்டு இருப்பதால், முன்னெச்சரிக்கையாக மோட்டார்சைக்கிள்கள் ரிகால் செய்யப்படுகின்றன. பாதிக்கப்பட்ட யூனிட்களில் உள்ள கியர்பாக்ஸ் இன்புட் ஷாஃப்ட் ஓவர்லோட் ஆகி உடையும் சூழல் நிலவுகிறது. இது பின்பற சக்கரத்தை திடீரென நிறுத்தி விடும். இதன் காரணமாக விபத்து ஏற்பட்டு பயனாளர்களுக்கு காயம் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. இதனை தவிர்க்கும் நோக்கில் தான் தற்போது இந்த ரீகால் எனப்படும் திரும்ப பெறும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பி.எம்.டபுள்யூ இரு சக்கர வாகனங்களை திரும்ப பெறும் நடவடிக்கை தற்போதைக்கு வட அமெரிக்க சந்தையில் மட்டும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
பயனாளர்களுக்கு எச்சரிக்கை:
பாதிக்கப்பட்ட யூனிட்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், அவற்றை பயன்படுத்த வேண்டாம் என பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் வலியுறுத்தி உள்ளது. மேலும் ரிகால் சர்வீஸ் செய்ய அருகாமையில் உள்ள பிஎம்டபிள்யூ விற்பனையாளரை தொடர்பு கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட வாகனங்களில் பிஎம்டபிள்யூ விற்பனையாளர்கள் இன்ஜின் கண்ட்ரோல் யூனிட் மென்பொருளை அப்டேட் செய்து வழங்க உள்ளனர். அதோடு மட்டுமின்றி, பிஎம்டபிள்யூ நிறுவனம் 2019 முதல் 2023 வரை உற்பத்தி செய்யப்பட்ட R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் மற்றும் R 1250 RTP மாடல்களின் விற்பனையை நிறுத்த உத்தரவிட்டுள்ளது.
திரும்பப் பெறப்பட்ட 14,000 கார்கள்:
முன்னதாக 14,000 க்கும் மேற்பட்ட மின்சார கார்களை திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பை பிஎம்டபிள்யூ நிறுவனம் அண்மையில் வெளியிட்டது. அதில், அக்டோபர் 14, 2021 மற்றும் அக்டோபர் 28, 2022 க்கு இடையில் தயாரிக்கப்பட்ட சில iX SUVகள் மற்றும் i4 மற்றும் i7 செடான்களை திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. மென்பொருள் செயலிழப்பினால் மின்சாரம் இழப்பு மற்றும் விபத்து அபாயத்தை அதிகரிக்கும் என கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விளக்கமளித்துள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI