China Young Married Old: ஜப்பானில் 80 வயது முதியவரை 23 வயது இளம்பெண் திருமணம் செய்துகொண்ட நிலையில், அவர்களது புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.


23 வயது பெண்னை திருமணம் செய்த 80 வயது முதியவர்:


சீனாவில் வழக்கத்திற்கு மாறாக அரங்கேறிய காதல் திருமணம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளதோடு, சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளது. காரணம், 23 வயது இளம்பெண் ஒருவர், தனது பெற்றோரையே உதறிவிட்டு 80 வயதான ஒருவரை திருமணம் செய்துள்ளார். அவர்களது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக, நெட்டிசன்கள் இரண்டு தரப்பாக பிரிந்து பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.


முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்:


23 வயதான Xiaofang (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது), Hebei மாகாணத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் தன்னார்வலராக பணிபுரிந்து வந்தார். அப்போது அங்கு வசித்து வந்த 80 வயதான லி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்பவரை சந்தித்து பழக தொடங்கியுள்ளார். இருவருடைய பழக்கவழங்களும், விருப்பங்களும் ஒரே மாதிரியாக இருக்க அவர்கள் இடையேயான நட்பு அதிகரித்துள்ளது. நாளடைவில் லியின் முதிர்ச்சித்தன்மை, நிலைப்புத்தன்மை மற்றும் ஞானத்தால்  Xiaofang ஈர்க்கப்பட்டுள்ளார். இதே போன்று அந்த பெண்ணின் இளமை, உற்சாகம் மற்றும் கருணை ஆகியவற்றால் அந்த முதியவரும் ஈர்க்கப்பட்டுள்ளார். இதனால் இருவரிடையேயான பழக்கம் நட்பு என்பதை தாண்டி காதலாக உருவெடுத்துள்ளது.


பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம்:


அதேநேரம், பெண்ணின் காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முதியவருடனான காதல் வாழ்க்கை அவரது எதிர்காலத்திற்கு உகந்தது அல்ல என எடுத்துரைத்துள்ளனர். ஆனால், தனது காதலே முக்கியம் என கருதிய  Xiaofang தனது குடும்பத்தினர் உடனான உறவை துண்டித்துக்கொண்டு, முதியவர் லியை திருமணம் செய்துகொண்டார். ஜோடியாக இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக அதும் பெரும் விவாதத்தை தூண்டிவிட்டுள்ளது.


சமூக வலைதளங்களில் ஆதரவும், எதிர்ப்பும்:


முதியவரை திருமணம் செய்து கொண்டதற்கு ஒருதரப்பினர் கடும் எதிர்வினையாற்றி வருகின்றனர். அதேநேரம், மற்றொரு தரப்பினர்  Xiaofang பெண்ணின் தைரியத்தையும், லி மீதான காதலை மதிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.  Xiaofang பணத்திற்காக லியை திருமணம் செய்து கொண்டதாக பலர் குற்றம் சாட்டினார். ஆனால் அந்த தம்பதியில் சம்பாதிப்பதே அந்த பெண் தான் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. தனது வயது முதிர்வு மற்றும் மோசமான உடல்நிலை காரணமாக, லி தனது சாதாரண ஓய்வூதியத்தை மட்டுமே நம்பியிருக்க வேண்டியுள்ளது. எனவே பெரும்பாலான நிதிச் சுமைகளைக் கையாளுவது Xiaofang தான். இருப்பினும், லீயால் எதுவும் சாத்தியம் என்று கூறி சவாலை தைரியமாக அந்த பெண் வரவேற்கிறாள்.


Xiaofang தொடர்ந்து தங்களது புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகிறார். இது உண்மையான அன்பின் ஆதாரமாக பலர் விளக்கினர். இருப்பினும், சர்ச்சைக்குரிய வயது வித்தியாசம் 23 வயதான பெண்ணுக்கு எதிரான குற்றச்சாட்டுகளையும் தூண்டியுள்ளது