அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியா ( Philadelphia )மாகாணத்தில் இரவு நேர கேளிக்கை நிகழ்ச்சியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.


இது தொடர்பாக அநாட்டின் செய்தி ஊடகங்களில் வெளியான தகவலின்படி, சனிக்கிழமை இரவு கென்சிங்டன் ( Philadelphia's Kensington section) பகுதியில்  East Allegheny அவென்யூவில் உள்ள பாரில்  (Bar) கேளிக்கை விருந்து நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஒரு நபர் துப்பாக்கியால் சுட தொடங்கியுள்ளார். இந்த தாக்குதலில் 12 பேர் காயமடைந்துள்ளனர். குண்டு பாயந்த 12 பேரின் உடல்நிலை குறித்து இதுவரை எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. 


அமெரிக்காவில் தொடர்ந்து நடந்து வரும் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்பு நிலவி வருகிறது. சமீபத்தில் அதிபர் ஜோ பைடன் துப்பாக்கிச் சூடு நிகழ்வுகள் தொடர்பாக வேதனை தெரிவித்திருந்தார். வட கரோலினா பகுதியில் நடந்த சம்பவத்தில் ஐந்து பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


இது தொடர்பாக ஜோ பைடன் வெளியிட்ட அறிக்கையில், “ துப்பாக்கிச் சூட்டில் நாம் பல உயிர்களை இழந்துவிட்டோம். பல குடும்பங்களுக்காக வேதனையடைந்துள்ளோம். அவர்களுக்காக பிரார்த்திக்கிறோம். “ என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். 


நாட்டில் நடக்கும் துப்பாக்கி சூடு சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பைடன், இது தொடர்பாக சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்றும் இதற்கான உள்ள சட்டங்கள் அனைத்தும் அவ்வளவு கடுமையாக இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.


துப்பாக்கிச் சூடு கலாச்சாரத்தை கட்டுப்படுத்தும் வகையில் அண்மையில் புதியதொரு சட்டத்தை அந்நாடு முன்மொழிந்தது. இதற்கு அமெரிக்க மேல் சபையான செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. 


பணியில் இல்லாத காவல்துறை அதிகாரி உட்பட 5 பேர் துப்பாக்கிச் சூட்டில் பலியாகினர்.  இதுபோன்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் அமெரிக்காவில் தொடர்கதையாகி வருகிறது.  கடந்த ஓராண்டில் மட்டும் 49,000 பேர் உயிரிழந்ததாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் 49,000 பேர் உயிரிழந்ததாக தகவல்  வெளியாகி உள்ளது. அதாவது நாள் ஒன்றுக்கு சராசரியாக 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறுவது குறிப்பிடத்தக்கது.




மேலும் வாசிக்க..


TamilNadu Rains: ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு கனமழை... 9ஆம் தேதி உருவாகும் காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி!