ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடுபவர்கள் வெவ்வேறு பிரச்சனைகளை சந்திப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். சில நேரம்  ஆர்டர் செய்த சாப்பாட்டில் புழு, பூச்சிகள் இருக்கும் , சில நேரம் யாரோ ஆர்டர் செய்த உணவு நமக்கு வந்துவிடும் இப்படியான பல சிக்கல்களை சமாளித்து மீண்டும் மீண்டும் ஆர்டர் செய்து சாப்பிடுவது அந்த ஒரு ஜான் வயித்துக்காகத்தான்.

 

இந்த நிலையில் வறுத்த கோழி சாப்பிட ஆசைப்பட்ட இளம் பெண் ஒருவருக்கு, உப்பு , காரம், மசாலா தடவிய குளியல் அறை டவல் பார்சலாக வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த அலிக் பெரஸ் என்பவரின் மகன், தனக்கு  ஜூஸி, கிரிஸ்பி சிக்கன் சாப்பிட வேண்டும் என கேட்க, அவரும் ஆசையாக அங்குள்ள பிரபலமான ஜூப்ளி என்ற ரெஸ்டாரண்ட்டில்  வறுத்த முழு கோழி ஒன்றினை ஆர்டர் செய்துள்ளார். சிறிது நேரத்தில் டெலிவரி செய்யப்பட்ட  வறுத்த கோழியின் ஒரு பகுதியை மகனுக்கு கொடுக்க ஆர்வமாக முயற்சித்த அவருக்கு மிகவும் சிரமமாக இருந்திருக்கிறது. பின்னர் அதனை சாப்பிட்டு பார்த்திருக்கிறார் அலிக், அப்போதுதான் அவருக்கு பேரதிர்சியாக இருந்திருக்கிறது. ஆடர் செய்த கோழி வறுவலுக்கு பதிலாக, தலைதுவட்டும்  டவலை வறுத்து அனுப்பியுள்ளது ஜூப்ளி ரெஸ்டாரண்ட்.

 


 

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் , வீடியோவாக எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவேற்றிவிட்டார். இந்த  வீடியோ வைரலானதை தொடர்ந்து நெட்டிசன்கள் “டவல் ஃபிரை செய்வது எப்படி” என ட்ரால் செய்ய  தொடங்கிவிட்டனர். இது குறித்த விசாரணையில் ஜூப்ளி நிர்வாகம் ஈடுபட்டுள்ளதால், அதன் கிளைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இது போன்ற அலட்சியப்போக்கை எதிர்த்து பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.