கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அமைந்து உள்ள பேருந்து நிலையத்தில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு வள்ளி கந்தன் எனும் தனியார் பேருந்தில் பேருந்து நிலையத்தில் இருந்த  மன நலம் பாதிக்கப்பட்ட கண்ணப்பன் என்பவர்  ஏறி உள்ளார்.  அப்பொழுது பேருந்துக்குள் நின்றுகொண்டு இருந்த நடத்துனர் மன நலம் பாதிக்கபட்ட கண்ணபணிடம் டிக்கெட் எடுக்கும் படி கேட்டு உள்ளார் அப்பொழுது நடத்துனர் வைத்திருந்த  பையை கண்ணப்பன் பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது, ஏன் பையை இழுக்கிறீர்கள் என  கண்ணப்பணிடம் நடத்துனர் கேட்ட பொழுது  மன நலம் பாதிக்கப்பட்ட கண்ணப்பன் திடீரென தன் காலில் போட்டிருந்த செருப்பை கழட்டி நடத்துநரை தாக்கி உள்ளார். பின், இதனால்  ஆத்திரமடைந்த அப்பேருந்தில் இருந்த இரண்டு  நடத்துனர்களும் மன நலம் பாதிக்கப்பட்ட கண்ணப்பனை தாக்கி உள்ளனர்.



மேலும் கண்ணப்பணை நடத்துனர்கள் பேருந்தில் இருந்து கீழே இறக்கி அவர் செருப்பால் அடித்தது போல நடத்துனர்களும் மன நலம் பாதிக்கப்பட்ட கண்ணப்பனை செருப்பால் அடித்து தகாத வார்த்தைகளால் அவரை திட்டி, பேருந்து நிலையத்தில் தர தரவென இழுத்துச் சென்று உள்ளார்கள். ஆனால் அந்த சமயத்தில் பேருந்து நிலையத்தில் இருந்த யாருமே மன நலம் பாதிக்கப்பட்ட கண்ணபனை அடித்த நடத்துனர்களை பொது இடத்தில் ஒரு நபரை இருவர் கடுமையாக தாக்கும் பொழுதும் ஏன் அடிக்கிறார்கள் என யாருமே அவர்களை கேட்க முன் வராதது பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தை பேருந்து நிலையத்தில் இருந்த நபர் ஒருவர் எடுத்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, விருத்தாசலம் காவல் துறையினரிடம் முகிலம் என்பவர் குடுத்த புகாரின் பேரில் நேற்று நடத்துனர் வீரமணி  மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் அவர்களை கைது செய்து உள்ளனர். 




கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் கன்னியாகுமரி மாவட்டத்தில்  மீன் வாடை அடிப்பதாக கூறி ஒரு மீன் விற்கும் பெண்ணை பேருந்தில் இருந்து நடத்துனர் கீழே இறக்கி விட்டார் மேலும் அதே கண்ணியாகுமரி மாவட்டத்தில் நரிக்குறவர் குடும்பத்தினை பேருந்து சென்றுகொண்டு இருக்கும் போது நிறுத்தி நடு ரோட்டில் இறக்கி விட்டனர், இவ்விரு சம்பவங்களும் அடுத்தடுத்து நடந்த நிலையில் கடலூரில் பேருந்து நடத்துனர் மன நலம் பாதிக்கபட்ட நபரை கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.