திண்டிவனம் அருகே பட்டா மாறுதல் செய்ய ஐந்தாயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஓங்கூர் கிராம நிர்வாக அலுவலராக இருப்பவர் கருணாகரன். இவர் அருகில் உள்ள மற்றொரு கிராமமான ஓலக்கூர் கிராம நிர்வாக அலுவலர் பொருப்பை கூடுதலாக கவனித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒலக்கூர் கிராமத்தைச் சார்ந்த அசோக் என்பவர் தன்னுடைய ஆறரை சென்ட் நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்ய கிராம நிர்வாக அலுவலர் கருணாகரனை அணுகியுள்ளார் அப்போது பட்டா மாற்றம் செய்ய ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார் கருணாகரன்.


இதனால் அதிர்ச்சி அடைந்த அசோக் விழுப்புரத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார். அவர்களின் ஆலோசனை பேரில் இன்று ஓங்கூர் கிராம சேவை மைய கட்டிடத்தில் தற்காலிமகாக இயங்கி வரும் கிராம நிர்வாக அலுவலகத்தில் அசோக்கிடம் கருணாகரன் ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சமாக பெரும்பொழுது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் கிராம நிர்வாக அலுவலர் கருணாகரனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.


தொடர்ந்து அலுவலக கதைவை பூட்டிய லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அங்கேயே விசாரனை மேற்கொண்டனர்.  இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள லஞ்ச ஒழிப்பு துறையினர் கருணாகரனிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டா மாறுதலுக்கு கிராம நிர்வாக அலுவலர் ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




என்ன செய்ய வேண்டும்? 


நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.