விழுப்புரம் அருகே உள்ள பொன்னங்குப்பத்தில் மனைவி பிரிந்த சோகத்தில் மதுபோதைக்கு அடிமையாகி கணவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


விழுப்புரம் அருகேயுள்ள பொன்னங்குப்பத்தை சார்ந்த வினோத்குமார் என்ற இளைஞருக்கு நான்கு வருடங்களுக்கு முன்பு சூர்யா என்ற பெண்ணுடன் திருமணமாகி அதே பகுதியில் வசித்து வந்தனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு மற்றும் குழந்தை பாக்கியம் இல்லை என்பதால் மனைவி சூர்யா வினோத்குமாரை பிரிந்து கடந்த ஒருவருடமாக தனது தாயார் வீட்டில் வசித்து வருகிறார். மனைவி பிரிந்ததால் மது போதைக்கு அடிமையாகினார்.


இந்தநிலையில், வினோத்குமார் பொன்னங்குப்பத்தில் கோவிந்தராஜ் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கிணற்றில் பிணமாக மிதப்பதை கண்ட அப்பகுதியினர் விக்கிரவாண்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததின் பேரில் போலீசார் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரனை மேற்கொண்டனர். அதில் மனைவி பிரிந்த சோகத்தில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம். சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம், எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060


 




என்ன செய்ய வேண்டும்? 


நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.