விழுப்புரம்: அரகண்டநல்லூர் அருகே விழிப்புணர்வு நாடகம் நடிக்க சரக்கு வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர்களின்  வாகனம் கவிழ்ந்த விபத்தில் ஒரு மாணவர் உயிரிழந்தார்.  20 பேர் காயம் அடைந்தனர்.


விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்டது ஆலம்பாடி கிராமம். இந்த கிராமத்தில் இயங்கி வரும் தனியார் தொண்டு நிறுவனத்தில் தங்கி சென்னையில் (லயோலா கல்லூரி) இருந்து 67 மாணவ மாணவிகள், இப்பகுதி கிராம மக்களிடையே விழிப்புணர்வு செய்வதற்காக வந்து தங்கியுள்ளனர். இந்த நிலையில், நேற்று மாலை ஆலம்பாடி தொண்டு நிறுவனத்திலிருந்து வடகரை தாழனூர் கிராமத்தில் விழிப்புணர்வு நாடகம்  போடுவதற்கு, 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் சரக்கு வாகனத்தில் சென்றுள்ளனர்.


இந்நிலையில், வாகனம் கடகனூர் அருகே உள்ள வளைவு சாலையில் வந்து கொண்டிருந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த கட்டையில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், கல்லூரி மாணவன் சாமுவேல் (21) நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும்,  வாகனத்தில் பயணித்த 20 மாணவர்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்ட அனைவரும் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 5க்கும் மேற்பட்ட மாணவர்கள் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, உயர் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து அரகண்டநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த பகுதியில் போதிய மின் விளக்குகள் மற்றும் எச்சரிக்கை வளாகவியல் இல்லாததே இது போல் விபத்துக்கு முக்கிய காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.  உடனடியாக அரசு நிர்வாகம் விரைந்து அந்த பகுதியில் மின்விளக்குகளை அமைக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை பலகைகளை அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


 




என்ன செய்ய வேண்டும்? 




நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.