விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கோவிந்தசாமி கலை கல்லூரி எதிரே ஆதிதிராவிடர் நல மகளிர் விடுதி செயல்பட்டு வருகிறது. இதில் வெளியூரை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் திடீரென அங்கு வந்த அமைச்சர்கள் கயல்விழி மற்றும் செஞ்சி மஸ்தான் சமையல் கூடம் போன்ற பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர். மேலும் மாணவிகளிடம் சரியான முறையில் விடுதியை பராமரிப்பு செய்கிறார்களா?, விடுதிகளில் தரமான முறையில் உணவு தயாரிக்கப்படுகிறதா? என கேட்டறிந்தார்கள்.


ஒவ்வொரு அறையாக சென்ற அமைச்சர்கள் விடுதி முழுவதும் குப்பையாகவும், சுவர்கள் முழுவதும் தூசி படிந்து இருந்ததை கண்டு கோபம் அடைந்த அமைச்சர்கள், விடுதி காப்பாளரை கண்டித்தனர். அப்போது அமைச்சர் செஞ்சி மஸ்தான் விடுதி காப்பாளரை அழைத்து இது உங்கள் வீடாக இருந்தால் நீங்கள் எப்படி பராமரிப்பீர்கள் என கேட்டார். அதற்கு  விடுதி காப்பாளர், மாணவிகள் யாரும் எனக்கு உதவி செய்ய முன் வருவதில்லை என கூறினார். உடனடியாக அமைச்சர் மஸ்தான், “நீங்கள் டாட்டா பிர்லாவா, இல்லை ஜமீன்தாரரா”  என கேட்டார். உங்கள் வீடாக இருந்தால் எப்படி பராமரிப்பீர்கள், அதேபோல நினைத்து விடுதியை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் என விடுதி காப்பாளரிடம் கோபமாக தெரிவித்தார்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்









ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண