விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகேயுள்ள பொம்பூரில் வாகன விபத்தில் உயிரிழந்த நண்பனின் முதலாமாண்டு நினைவு நாளில் சக நண்பர்கள் 50க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்த நிகழ்வு அனைவரின் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள பொம்பூர் கிராமத்தை சார்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகன் தமிழ்வாணன் கடந்த வருடம் 24.07.2022 ஆம் தேதி பொம்பூரிலிருந்து புதுச்சேரி சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தபோது போது திருக்கனூரில் லாரி, இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் தமிழ்வாணன் ரத்தம் அதிகமாக வெளியேறி சம்பவ இடத்திலையே உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் தமிழ்வாணனின் முதலாமாண்டு நினைவு நாள் இன்று பொம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் கடைபிடிக்கப்பட்டது.
நினைவு நாளில் சக நண்பர்கள் நண்பனுக்கு ஏற்பட்ட துயரம் யாருக்கும் ஏற்பட கூடாது என்பதற்காக இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் போது ஹெல்மெட் அணிந்து கவனமாக செல்ல வேண்டும். ரத்த தானம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி 50க்கும் மேற்பட்டோர் ரத்த தாணம் வழங்கினர். நண்பன் வாகன விபத்தில் ரத்தம் அதிகமாக வெளியேறி உயிரிழந்ததால் ரத்த தானம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி ரத்த தானம் வழங்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்