விழுப்புரம்: வளவனூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் வீட்டு மனையை பத்திர பதிவு செய்ய சார்பதிவாளர் அலுவலக ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாக விழுப்புரம் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் சகோதரர்கள் இருவர் புகாரளித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே உள்ள குமளம் கிராமத்தை சேர்ந்த சகோதரர்களான ஜெயராமன், ஜெயகோபால் ஆகிய இருவரும் தனது தந்தை ஆளவந்தார்சாமி பெயரில் உள்ள வீட்டு மனையை சகோதரர்கள் இருவரும் சரி சமமாக பிரித்துக்கொள்ள முடிவு செய்து அதற்காக வளவனூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்து பதிவு செய்யும்படி முறையிட்டுள்ளனர். அப்போது ஆவணங்கள் அனைத்தையும் சரிபார்த்த போது வில்லங்கம் சான்று கேட்டுள்ளனர். அதில் வில்லங்கம் இல்லையென சான்று பெற்று வரக்கூறியுள்ளனர். வில்லங்கம் இல்லையென கிராம நிர்வாக அலுவலர் சான்று அளித்துள்ளார்.
வில்லங்க சான்று இல்லையென என்ற சான்றுடன் சென்ற நபரிடம் மனையை பத்திர எழுத்தர் மூலம் பதிவு செய்யும் படியும், அதற்காக ஐம்பதாயிரம் செலவு ஆகும் என கூறி அனுப்பியுள்ளனர். மனை பதிவு செய்வதற்கு அனைத்தும் சரியாக உள்ளபோது ஏன் பத்திர எழுத்தரிடம் நாங்கள் செல்லவேண்டுமென கேட்டபோது, ரிஜிஸ்டர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் பூங்காவனம் லஞ்சம் தரவேண்டும் என தெரிவித்து ரிஜிஸ்டர் செய்ய முடியாதென அனுப்பியுள்ளனர். இதனால் மனை பத்திர பதிவு செய்யமுடியாமல் பாதிக்கப்பட்ட சகோதரர்கள் பத்திர பதிவு செய்ய லஞ்சம் கேட்பதாக விழுப்புரம் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்