புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கேஸ் சிலிண்டருக்கு ரூபாய் 300 மற்றும் ரூபாய் 150 மானியம் வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். மேலும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள சிவப்பு அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு தலா 300 ரூபாய் மானியம் மற்றும் வறுமை கோட்டிற்கு மேல் உள்ள மஞ்சள் அட்டைதாரர்களுக்கு ஒரு சிலிண்டருக்கு ரூபாய் 150 மானியம் வழங்க சமீபத்தில் புதுச்சேரி அரசு முடிவு செய்தது.
இது குறித்த கோப்பு தற்போது ஆளுநர் தமிழிசை அவர்களிடம் வந்துள்ள நிலையில் அதற்கு அவர் ஒப்புதல் அளித்துள்ளார். எனவே இனி புதுச்சேரியில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள சிவப்பு அட்டைதாரர்களுக்கு ரூபாய் 300 மானியமும் வறுமை கோட்டிற்கு மேல் உள்ள மஞ்சள் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 150 மானியமும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்