விழுப்புரம்: செஞ்சி அருகே 15 ஆம் நூற்றாண்டில் செதுக்கப்பட்ட நாயக்கர் கால கல்தூண் மீட்பு

முட்டத்தூர் கிராமத்தில் 15 ஆம் நூற்றாண்டில் செதுக்கப்பட்ட பழமையான ராட்சதக் கல் தூணை திமுகவினர் சட்ட விரோதமாக கடத்தி சென்ற கல்தூண் மீட்கப்பட்டது.

Continues below advertisement

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுக்கா முட்டத்தூர் கிராமத்தில் கி.பி 15-16 ஆம் நூற்றாண்டில் செதுக்கப்பட்ட 37 அடி நீளம் கொண்ட சுமார் 10 டன் எடையுள்ள பழமைவாய்ந்த ராட்சத கல் தூணை நேற்று முன்தினம் இரவு உள்ளூர் திமுக நிர்வாகிகள் துணையுடன் விக்கிரவாண்டி திமுக ஒன்றிய செயலாளர் வேம்பி ரவி கனரக லாரி மூலம் கடத்தி சென்று விட்டதாக முட்டத்தூர் கிராம பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Continues below advertisement


மேலும், இதுகுறித்து வருவாய்த்துறையினர் மற்றும் கஞ்சனூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் திமுக பிரமுகர் என்பதால் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உடந்தையாக செயல்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து பேசிய கிராம பொதுமக்கள், கி.பி 15-16 ஆம் நூற்றாண்டில் செதுக்கப்பட்ட ராட்சத கல் தூண்கள் செஞ்சி கோட்டையை ஆட்சி செய்த நாயக்கர் ஆட்சி காலத்தில் எடுத்து செல்லப்பட்டு செஞ்சி கோட்டையில் உள்ள வெங்கட்ராமனர் ஆலயத்தில் ஆயிரம் கால் மண்டபத்தை இந்த கல் தூண்கள் கொண்டு கட்டப்பட்டது.

 

Mayiladuthurai Kidnap: மயிலாடுதுறையில் வீடு புகுந்து இளம்பெண்ணை கடத்திய கும்பல் - அதிர்ச்சி வீடியோ..!

எனவே வரலாற்று சிறப்புமிக்க பழமையான இந்த ராட்சத கல் தூண்களை சட்ட விரோதமாக எடுத்துச் சென்ற திமுகவினர் மீது நடவடிக்கை எடுத்தும், அந்த கல் தூண்களை மீண்டும் முட்டத்திற்கு கிராமத்திற்கு கொண்டு வந்து வைக்கவும் கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். இந்தநிலையில் கடத்தப்பட்ட கல்தூண் விழுப்புரம்- செஞ்சி சாலையில் உள்ள வேம்பி எனும் கிராமத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து விக்கிரவாண்டி வட்டாட்சியர் இளவரசன், வேம்பி கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அதன் தொடர்ச்சியாக கல்தூண் அங்கிருந்து மீட்கப்பட்டு ஏற்கனவே இருந்த இடத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு முட்டத்தூர், கல்யாணம்பூண்டி கிராம மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதை கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்று கொண்டாடினர். அப்போது 2 கிராமங்களின் முக்கியஸ்தர்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.


11ஆண்டுகளுக்குப் பின் ரசிகர்களை சந்தித்த அஜித்... மும்பை டூ திருச்சி நடந்தது என்ன?

Thangam Thennarasu : ஈபிஎஸ்க்கு தங்கம் தென்னரசு எச்சரிக்கை


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement