பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக கடந்த மே மாதம் 26ம் தேதி சென்னை எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி, கன்னியாகுமரி ஆகிய ரயில் நிலையங்களை மொத்தமாக 1,800 கோடி ரூபாய் மதிப்பில் மறுசீரமைப்பு செய்வதற்கான பணிகளை தொடங்கி வைத்தார்.

 

 





இதில் மதுரை ரயில் நிலையம் மட்டும் 440 கோடி ரூபாய் மதிப்பில் மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளது. இந்நிலையில் மதுரை ரயில் நிலையத்தை புனரமைக்க 358.63 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒப்பந்த புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. இந்த கட்டுமான பணியினை 26 மாதங்களுக்குள் முடிக்க ஐ.ஆர்.சி.ஓ என் - இன்டர்நேஷனல் லிமிடெட் உத்தரவு (Ircon International Limited ) இட்டுள்ளது.



 


மேலும் ரயில்வே தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - திருச்சி, மதுரை : ரயில் பாதை பராமரிப்பு பணிகள்.. எங்கெங்கு ரயில் போக்குவரத்தில் மாற்றம்?


ரயில் நிலைய வடிவமைப்பு, விரிவான பொறியியல் ஆய்வுகள் பொறியியல் கட்டுமானத்திற்கு முந்தைய மற்றும் கட்டுமானத்திற்குப் பிந்தைய, இடிப்பு மற்றும் புதுப்பித்தல் பணிகள், கொள்முதல், ரயில் போக்குவரத்து, கட்டுமானம், இயந்திரவியல், மின்சாரம், தீ அணைத்தல் என சுமார் 16 வகையான பணிகள் மேற்கொள்ள விருப்பமுள்ள கட்டுமான நிறுவனங்கள் ஆகஸ்ட் 8-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, https://etenders.gov.in/eprocure/app இந்த இணையதள பக்கத்தில் டெண்டருக்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியன் ரயில்வேக்கு கீழ் செயல்பாடு இர்கான் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் ஒப்பந்த புள்ளியை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் விரைவில் மதுரை ரயில் நிலையம் புதிய தோற்றத்தில் மாறுவதற்கான பணிகள் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண