தமிழ்நாடு முழுவதும் கடந்த மாதம் 19ம் தேதி மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதையடுத்து, வாக்கு இயந்திரங்கள் சீலிடப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது.
சிசிடிவி கேமரா செயலிழப்பு
விழுப்புரம் தொகுதியில் பதிவான வாக்குகள் வைக்கப்பட்டுள்ள வாக்குமையத்தில் இரண்டாவது முறையாக 8 சிசிடிவி கேமராக்கள் இடி தாக்கியதால் மின்பழுது ஏற்பட்டு செயல் இழந்ததது. உடனடியாக பழுது நீக்கப்பட்டு செயல்பட தொடங்கியதாக மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் கீழ்பெரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் மின்னனு வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. மின்னனு வாக்குபதிவு அறையில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் இன்று காலை 45 நிமிடங்கள் செயலிழந்தது. மழையின் காரணமாக ஜங்ஷன் பாக்ஸ் மற்றும் யு பி எஸ் சில் ஏற்பட்ட பழுது காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. இதனையடுத்து கீழ்பெரும்பாக்கம் அரசு கலைக்கல்லூரியில் மின்னனு வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையில் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான பழனி நேரில் ஆய்வு செய்தார்.
மாவட்ட ஆட்சியர் விளக்கம்
ஆய்விற்கு பிறகு பேட்டியளித்த மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி கண்காணிக்கும் கேமராக்களில் திண்டிவனம் சட்டமன்ற தொகுதி மற்றும் விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் பதிவான மின்னனு வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் 8 கேமராக்கள் 45 நிமிடங்கள் செயலிழந்ததாக தெரிவித்தார். மேலும் திடீரென பெய்த கனமழையில் இடி தாக்கியதால் கேமாராக்களுக்கு செல்லும் ஜங்கஷன் பாக்சில் மின்பழுது ஏற்பட்டதாகவும் உடனடியாக சரி செய்யப்பட்டு மீண்டும் கேமராக்கள் இயங்கிய வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு அறையில் 20 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால் 4 கேமராக்கள் பழுது ஏற்பட்டதால் எந்தவித பாதிப்பு ஏற்படவில்லை என்றும் அனைத்தும் ரெக்கார்டு செய்யபட்டு பராமரிக்கப்பட்டு வருவதாகவும், மீண்டும் பழுது ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.