விழுப்புரத்தில் கஞ்சா போதை பொருள் விற்பனை செய்யும் குற்றவாளிகளுடன் காவல் துறையினர் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என விழுப்புரம் எஸ் பி ஸ்ரீநாதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.


மேலும் விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர்  ஸ்ரீநாதா கூறியதாவது :-


விழுப்புரம் மாவட்டத்தில் போதை கஞ்சா பொருட்கள் கடத்தலை தடுக்கும் விதமாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது, போதை மாத்திரை ஊசி கடத்தலை தடுக்கும் விதமாக தற்போதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் 900 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர், மேலும் போதை மாத்திரை ஊசி, கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யபடுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார். கஞ்சா கடத்தலில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 194 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 242 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 39 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.


கடந்த ஒருவருடமாக குட்கா கடத்தலில் 568 வழக்குகளில் பதிவு செய்யப்பட்டு  589 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், குட்கா கடத்தலில் ஈடுபடுவோர் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை எடுக்கப்படும் எனவும் விழுப்புரம் மாவட்டத்தில் குற்றசம்பவங்களை தடுக்க மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக கூடுதலாக வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எஸ் பி ஸ்ரீநாதா தெரிவித்துள்ளார்.


மேலும், பெற்றோர்கள் வீட்டில் உள்ள பிள்ளைகளை கவனிக்க வேண்டும், கல்லூரி மாணவர்களை முக்கியமாக கவனிக்க வேண்டும் எனவும் தற்போது மாணவர்கள், வாலிபர்கள் அதிக அளவில் போதைக்கு அடிமையாகி வருகின்றனர், எனவே பெற்றோர்கள் பிள்ளைகள் போதைக்கு அடிமையகினால் உடனடியாக காவல் துறைக்கு தகவல் சொல்லவேண்டும், அவ்வாறு தகவல் தெரிவித்தால் அவர்களுக்கு கௌன்சிலிங் வழங்க காவல்துறை தயாராக உள்ளது என விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஸ்ரீநாதா தெரிவித்துள்ளார்.