செஞ்சி அருகே ஏரி மணல் கொள்ளை நடைபெறுவதாக போஸ்டர் ஒட்டியவர்கள் மீது திமுக ஊராட்சி மன்ற தலைவர் மகன் உள்ளிட்ட 5 பேர் தாக்குதல் நடத்தினர். மேலும் செய்தி சேகரிக்க விடாமல் செய்தியாளர்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்து அராஜகம் செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மீனம்பூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த முன்வர்பாஷா என்பவர் உள்ளார். இவர் ஏரியில் மண் திருட்டில் ஈடுபடுவதாக செஞ்சி பகுதி முழுவதும் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் பகுதியில் ஊர் பொதுமக்கள் என்ற பெயரில் சுவரொட்டி ஒட்டப்பட்டு இருந்தது.
இதுகுறித்து சுவரொட்டியில் இருந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டபோது தங்களிடம் ஆதாரம் உள்ளதாகவும் பேட்டி கொடுப்பதாக கூறியதை அடுத்து மீனம்பூர் கிராமத்திற்கு செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க சென்றபோது திமுக ஊராட்சி மன்ற தலைவர் முன்வர்பாஷா மகன் லியாகத் அலி உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்டோர் ஏரி மண் கொள்ளை குறித்து பேட்டி கொடுக்க முன் வந்தவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினர். அப்போது அதனை வீடியோ பதிவு செய்ய முற்பட்டபோது செய்தியாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து செய்தி சேகரிக்க விடாமல் அராஜகத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த செஞ்சி போலீசார் அங்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் மீனம்பூர் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
உங்கள் கண்முன்னே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்கத் தயக்கமாக இருக்கிறதா? காலங்காலமாக மாறவே மாறாத ஒன்றை, நாம் என்ன மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று மலைப்பாக இருக்கிறதா?
என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்