திண்டிவனம் காவேரிப்பாக்கம் ஏரியில் தூக்கில் தொங்கிய வாலிபர் சடலத்தை கைப்பற்றி போலீசார் கொலையா? என விசாரணை செய்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கிடங்கள் 2 பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அப்பு என்கின்ற அப்புகுமார்(30). இவர் திண்டிவனம் மேம்பாலம் பகுதியில் பழம் மற்றும் பூ வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை முதல் வீட்டில் இருந்து காணாமல் போனார். இதுகுறித்து அப்புகுமாரின் தாய் சாந்தி மற்றும் மனைவி தமயந்தி ஆகியோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் சாந்தி தனது மகனை காணவில்லை என திண்டிவனம் காவல் நிலையத்தில் வாய்மொழியாக தெரிவித்தார்.
பின்னர் அவரது செல்போன் எண்ணில் போலீசார் தொடர்பு கொண்ட பொழுது, போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், செல்போன் எண் லொகேஷனை ஆய்வு செய்தபோது, காவேரிப்பாக்கம் ஏரியில் காட்டியுள்ளது. அங்கு போலீசார் சென்று பார்த்தபோது அரச மரத்தில் நைலான் கயிறில் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டையம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், அப்புகுமார் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு சென்றனரா? என்ற பல்வேறு கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் 174-வது பிரிவின்கீழ் வழக்கு பதிவுசெய்திருக்கும் காவல்துறையினர், திருமணமாகி மூன்று மாதங்கள் ஆகின்றன என்பதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டு, ஆர்.டி.ஓ விசாரணை நடைபெற்று வருகிறது.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
உங்கள் கண்முன்னே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்கத் தயக்கமாக இருக்கிறதா? காலங்காலமாக மாறவே மாறாத ஒன்றை, நாம் என்ன மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று மலைப்பாக இருக்கிறதா?
என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்