விழுப்புரம் அடுத்த மேல்பாதி கிராமத்தில் பட்டயலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்காத விவகாரத்தில், மாநில அளவில் அரசியல் கட்சி தலைவர்களை போராட்டம் நடத்த அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு.


விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகிலுள்ள மேல்பாதி கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் கடந்த ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி தீமிதி திருவிழா நடைபெற்றது ,அப்போது அதே ஊரை சேர்ந்த பட்டியலின இளைஞர்கள் சிலர் கோயிலுக்குள் சென்றுள்ளனர் இதனால் ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர் (வன்னியர்) பட்டியலின இளைஞர்கள், பெண்களை தாக்கியுள்ளனர். இது குறித்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ள வளவனூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இரு தரப்பினரிடனும் மாவட்ட நிர்வாகத்தினர் 8 முறை சமாதான பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில் ஒரு தரப்பினர் பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில் இன்று இந்த விவகாரம் தொடர்பாக விழுப்புரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார். காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைசெல்வன் ஆகியோர் தலைமையில் அனைத்து கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 11 கட்சிகளை சேர்ந்த பிரிதிநிதிகள் கலந்துக்கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். இறுதியாக வருகின்ற 5ஆம் தேதி அனைத்து கட்சி பிரிதிநிதிகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்கவும். நடவடிக்கை இல்லை என்றால் மாநில அளவில் அரசியல் கட்சி தலைவர்களை ஒருங்கிணைத்து விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண