புதுச்சேரி: தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த விழுப்புரத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் கைது.  புதுச்சேரி திருபுனை பகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் வாகன திருட்டு நடைபெற்று வந்தது இந்நிலையில் திருபுவனை போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி மதகடிப்பட்டு பகுதியில் அதிகாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்தி விசாரணை மேற்கொண்டு வந்தனர் அப்பொழுது அதில் வந்த இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர்.


அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் திருபுவனை பகுதியில் இரண்டு சக்கர வாகனங்களை திருடி சென்றது தெரிய வந்தது அவர்களிடம் நடத்திய விசாரணையில் திருபுனை பகுதியில் 5 இரண்டு சக்கர வாகனங்கள் மடுகரை பகுதியில் 2 இரண்டு இரு சக்கர வாகனமும் வளவனூர் பகுதியில் 1 ஒரு வாகனமும் திருடியதை ஒப்புக் கொண்டனர்.


அவர்களிடமிருந்து இரண்டு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து சிறார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த இரண்டு சக்கர வாகனங்களில் மதிப்பு சுமார் 7 லட்சம் ஆகும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண