விழுப்புரம்: திண்டிவனத்தில் அரசு பேருந்து நடத்தனர் பணியின் போது நெஞ்சு வலி ஏற்பட்டு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கீழ் எடையாளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி என்பவரது மகன் குப்புசாமி. இவர் அரசு பேருந்து நடத்துனராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் இன்று இவர் வழக்கம் போல் விழுப்புரம் டிப்போவில் இருந்து சென்னைக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்தில் சென்றுக்கொண்டிருந்தார்.


பேருந்தானது கூட்டேரிப்பட்டு அருகே வந்து கொண்டிருக்கும் போது முனுசாமிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிய வருகின்றது. பின்பு ஒரு வழியாக நெஞ்சு வலியை பொறுத்துக் கொண்டு பணியில் ஈடுபட்டுள்ளார். பின்பு பேருந்தை திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ஓட்டுநர் கமலக்கண்ளன் நிறுத்திய பொழுது அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்பு 108 ஆம்புலன்ஸ் மூலமாக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு  வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றார்கள். பணியின் போது அரசு பேருந்து நடத்துனர்  நெஞ்சு வலியால் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.


 









ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண