விழுப்புரம் : விழுப்புரம் அருகேயுள்ள வெள்ளேரிபட்டு கிராமத்தில் அரசு பள்ளியில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் சமையற்கூடத்தில் கான்கிரிட் பெல்ட்டில் வெட்ப்பட்ட பாதி மரத்தோடு இணைத்து கட்டியதில் மரம் துளிர் விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


விழுப்புரம் மாவட்டம் கானை அருகேயுள்ள வெள்ளேரிபட்டு கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 5 லட்சம் மதிப்பீட்டில் சமையற் கூடம் அமைக்கும் பணியை திமுகவை சார்ந்த ஏரப்பன் என்பவர் எடுத்து செய்து வருகிறார். சமையற்கூடம் கட்டுமான பணிக்காக பள்ளி வளாகத்திலிருந்த தேக்க மரத்தினை வெட்டி விட்டு அதே பகுதியில் சமையற் கூடம் அமைக்கும் பணி மேற்கொண்டு பணி முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் சமையற் கூடத்திற்காக தரை தளத்தில் கான்கிரிட் பெல்ட்டு அமைக்கும் போது பணியாளர்கள் வெட்டப்பட்ட மரத்தினை முழுவதுமாக அகற்றாமல் கான்கிரிட் பெல்ட் அமைத்துள்ளனர்.


தற்போது வெட்டப்பட்ட மரமானது துளிர் விட ஆரம்ப்பித்துள்ளதால் கான்கிரிட் பெல்ட் சில மாதங்களில் விரிசல்கள் ஏற்பட்டு உடையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இரண்டிக்கு மரத்தினை வெட்டி விட்டு மரத்தின் அடிப்பகுதியை அகற்றாமல் அப்படியே கட்டிடம் அமைத்து இருபத்து அப்பகுயினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி வளாகம் என்பதால் சமையற் கூடம் எப்போது வேண்டுமானால் இடிந்து விழுந்து மாணவர்கள் பாதிப்பிற்குள்ளாவார்கள் என பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். விபத்துக்கள் ஏற்படுவதற்கு முன்னனே மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண