விழுப்புரம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நாட்டு கம்பு மூட்டைக்கு உரிய விலை கிடைக்கவில்லை என கூறி விவசாயிகள் ஒழுங்கு முறை விற்பனை கூட வாயிலில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் செயல்பட்டுவரும்  ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில்  கம்பு, தினை உள்ளிட்ட சிறுதானிய பொருட்கள் விற்பனைக்கு விவசாயிகள் கொண்டுவருவது வழக்கம், நேற்று வழக்கமான விலையை விட கம்பு மூட்டைக்கு (100 கிலோ) ரூ.6300 முதல் ரூ.6,500 என விலை வீழ்ச்சியடைந்தது.  இதனால், அதிருப்தியடைந்த விவசாயிகள் கிழக்கு பாண்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, விவசாயிகள் கூறியதாவது: கடந்த 7ம் தேதி (நேற்று ) கம்பு மூட்டைக்கு ரூ.7500-ரூ.8000 வரை விற்பனையாது. ஆனால், தற்போது, ரூ.1200 குறைத்து கொள்முதல் செய்யப்படுகிறது. உற்பத்திக்கு செலவு செய்த தொகையில் பாதி எங்களுக்கு கிடைக்கவில்லை. தானியங்களுக்கு நியாயமான விலை தராததுடன் சாக்கு மாற்ற மூட்டைக்கு ரூ 100 கேட்கின்றனர்.  


பணத்தையும் உடனடியாக பட்டுவாடா செய்யாமல் விவசாயிகளை அலைக்கழிக்கின்றனர். கம்புக்கு நியாய விலை வழங்கவும், உடனடி பணம் பட்டுவாடா செய்யவும் ஒழுங்கு முறை விற்பனைக் கூட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம்  விழுப்புரம் மேற்கு போலீஸார்  பேச்சுவார்த்தை நடத்தினர். குறைகளை அதிகாரிகளிடம் எடுத்துக் கூறி, பேசி தீர்க்க வேண்டுமே தவிர, மறியலில் ஈடுபடுவது முறையாகாது என  அறிவுறுத்தினர். இதனை ஏற்று விவசாயிகள் மறியலை கைவிட்டனர். மறியல் காரணமாக, விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் சுமார் 30 நிமிடம்  போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


 




விழுப்புரம் செய்திகள் :- 


குறைந்த முதலீட்டில் அதிக லாபம்... டாஸ்க்கை முடிக்க சொல்லி ரூ.1 லட்சம் மோசடி - பெண்ணை ஏமாற்றிய மோசடி நபர்


விலைவாசி உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் மறியல்; தண்டவாளத்தில் மயங்கி விழுந்த நிர்வாகி


‘5 நிமிஷம் கொடுங்க சார்’......ஆர்பாட்டம் நடத்த போலீசாரிடம் கெஞ்சிய பாஜக மாவட்ட தலைவர்


 




புதுச்சேரி, விழுப்புரம், கள்ளகுறிச்சி பகுதியில் உள்ள பொதுமக்களின் பிரச்சனைகளை தெரிவிக்க +918508008569 என்கின்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.