விழுப்புரம் : மரக்காணம் அருகே கந்தாடு கிராமத்தில் கடந்த ஆண்டு மழையின் போது எரி உடைப்பு ஏற்பட்டு மழை நீர் முழுவதும் வீணாக கடலில் கலந்தது, பின்னர் தற்காலிகமாக மணல் கொட்டி சரிசெய்தனர். ஆனால் அதற்கான நிரந்தர தீர்வு எடுக்கப்படவில்லை, ஏரியின் மதகு உடைந்து இருப்பதால் மீண்டும் மழை வந்தால் மழை நீரை சேமிக்க முடியாது, வீடுகளுக்குள் மழை நீர் புகும் ஆபாயம் உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் பகுதியில் கடந்த ஆண்டு ஒரே நாளில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியது. இதன் காரணமாக மரக்காணம் பகுதியில் உள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பின. கந்தாடு பகுதியில் உள்ள ஏரியில் கரை உடைப்பு ஏற்பட்டு அருகில் உள்ள காணிமேடு, கொள்ளுமேடு ஆகிய கிராமங்களில் உள்ள வீடுகள் மற்றும் வயல் வெளிகளில் வெள்ள நீர் புகுந்தது.
கந்தாடு ஊராட்சியில் 13 சிறு கிராமங்கள் உள்ளன. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். விவசாயம் முக்கிய தொழிலாக செய்து வருகின்றனர். இதற்கு நீர் ஆதாரமாக கந்தாடு கிராமத்தில் 65 ஏக்கர் பரப்பளவில் ஏரி அமைந்துள்ளது. இதன் மூலம் 250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. 5 ஆண்டுகளாக ஏரியின் கலங்கல் சேதமடைந்து ஏரியின் நீர் வீணாக சென்று கடலில் கலக்கிறது. ஏரி பாசனமின்றி விவசாயிகள் 200 அடி ஆழம் போர்வெல் மூலம் தண்ணீரை எடுத்து விவசாயம் செய்கின்றனர். இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது.
கடந்த ஆண்டு ஒரே நாளில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியது. இதன் காரணமாக மரக்காணம் பகுதியில் உள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பின. கந்தாடு பகுதியில் உள்ள ஏரியில் கரை உடைப்பு ஏற்பட்டு அருகில் உள்ள காணிமேடு, கொள்ளுமேடு ஆகிய பகுதிகளுக்கு வெள்ள நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியாரும் நிலைவந்தது. இந்த நிலையில் மழை நின்றவுடன் தற்காலிகமாக மணலை கொட்டி சரி செய்தனர்.
பின்னர், மதகு சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை, இதனால், வரும் மழைகாலத்தில் ஏரியில் மழை நீரை சேகரிக்க முடியாத நிலை உள்ளதால் ஏரி பாசனத்தை நம்பி உள்ள விவசாயிகள் கவலையில் உள்ளனர். மேலும் ஊருக்குள் வெள்ள நீர் புகுந்து விடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. உடைந்து போன மதகு மற்றும் சிதலமடைந்துள்ள கலங்கலை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.