விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராமகிருஷ்ணன் என்ற விவசாயி தனக்கு சொந்தமான இடத்தை கடந்த 3 ஆண்டுகளாக மனு அளித்தும் நிலம் அளந்து கொடுக்கவில்லை எனக் கூறி விவசாயி விஷம் குடித்து தற்கொலை முயற்சி ஈடுபட்டார்.


விழுப்புரம் அருகே கள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். 73 வயதான இவர், தனக்குச் சொந்தமான 37 சென்ட் நிலத்தை அதிகாரிகள் முறையாக அளவீடு செய்யாமல் அலைக் கழிப்பதாகக் கூறி, மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அவர் அளித்த மனுவின் மீது, இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இந்த நிலையில், தள்ளாத வயதினிலும் மனம் தளராத இவர், மீண்டும் மனு அளிப்பதற்காக, இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது, திடீரென வாட்டர் கேனில் கலந்து எடுத்து வரப்பட்ட பூச்சி மருந்தை குடித்து, இவர் தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து, மயங்கி விழுந்த இவரை போலீசார் மீட்டு, மருத்துவமனைக்கு ஆட்டோவில் அழைத்துச் சென்றனர். ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி ஒருவர் விஷம் அருந்திய சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.




ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண