விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், முத்தாம்பாளையம் ஏரியினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி, பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவிக்கையில், விழுப்புரம் அருகே உள்ள விக்கிரவாண்டி வட்டத்திற்கு உட்பட்ட முத்தாம்பாளையம் ஏரி 145 ஏக்கர் ஏரி பரப்பளவில் உள்ளது. முத்தாம்பாளையம் ஏரியினை தூர் வாரிடவும், மழைக் காலத்திற்குள்ளாகவே ஏரிக்கு நீர் வரும் வழித்தட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு ஏரியில் அதிகப்படியான நீர் நிரம்புவதற்கு வழிவகை ஏற்படுத்திடவேண்டும். மேலும், ஏரியில் பெரியவர்களுக்கான நடைபாதை அமைத்திடவும், சிறியவர்கள் விளையாடும் வகையில், பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய விளையாட்டு உபகரணங்கள் ஏற்படுத்திட வேண்டும். மேலும், சுற்றுலாத்தளமாக உருவாக்கிடும் வகையில், ஏரியில் படகு குழாம் அமைத்திடுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தெரிவித்தார்.
விழுப்புரத்தில் படகு குழாம்:
இயற்கை ஏழில் மிகுந்த மாவட்டமாக திகழக்கூடியது விழுப்புரம் மாவட்டம், குறிப்பாக விழுப்புரம் மாவட்டம் எல்லை பகுதியான மரக்காணத்தில் உப்பு உற்பத்தியும் கடற்கரையும் உள்ளது. அதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் தென்பண்ணையாறு, சங்கராபரணி ஆறு, தொண்டி ஆறு என பல்வேறு ஆறுகள் கடந்து செல்கின்றன. அதுமட்டுமின்றி விவசாயிகளின் உயிர்நாடியாக விளங்கி வருவது விக்கிரவாண்டி அருகே உள்ள வீடூர் அணை ஆகும். ஆனால் வீடூர் அணையில் நீர் நிரம்பும் பொழுது சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் செல்லும், இருப்பினும் அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பொழுதுபோக்கி மகிழ்வதற்கான எவ்வித வழியும் இல்லை, நீர் நிரம்பும் பொழுது வீடூர் அணை முழுவதுமாக கடல் போல் காட்சி அளிக்கும் இதனையே கண்ணிற்கு விருந்தளிக்கும் விதமாக அவர்கள் கண்டு செல்வார்கள். இந்த நிலையில்தான் தமிழக அரசு விழுப்புரம் மாவட்டத்தின் மீது தனி கவனம் செலுத்தி இருக்கிறது. ஏனென்றால் விழுப்புரம் மாவட்டம் விவசாயம் உட்பட அரசியலிலும் முக்கிய இடமாக கவனிக்க கூடிய இடத்தில் விழுப்புரம் மாவட்டம் உள்ளது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு விருந்தளிக்கும் விதமாக படகு குழாம் அமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் பழனி முன்னெடுத்துள்ளார் இதற்கான பணிகளையும் அதிவேகமாக நடத்தி வருகிறார்.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட மக்களிடம் கூறிய கருத்துக்கள்..
விழுப்புரம் மாவட்டத்தை பொருத்தவரை விக்கிரவாண்டி அருகே இருக்கக்கூடிய வீடூர் அணை, மரக்காணம் கடற்கரை மட்டுமே பொழுது போக்கும் இடமாக இருக்கும். தென்பெண்ணை ஆற்றில் நடைபெறும் ஆற்று திருவிழா இவை மட்டுமே எங்களுக்கு பொழுதுபோக்காக இருந்தது. இவை ஒரு சில நாட்கள் மட்டுமே நடைபெறும் விழாவால் விழுப்புரம் மாவட்ட மக்கள் ஒன்றிணைந்து சந்தித்து அன்பை பரிமாற்றிக் கொள்வார்கள். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்திற்கு படகு குழாம் வருவது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது என தெரிவித்தனர்.
புதுச்சேரி, விழுப்புரம், கள்ளகுறிச்சி, கடலூர் பகுதியில் உள்ள பொதுமக்களின் பிரச்சனைகளை தெரிவிக்க +918508008569 என்கின்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
கனகாம்பரம் பூ விவசாயத்தில் அதிக லாபம் ஈட்டும் விழுப்புரம் விவசாயிகள்
Vinayagar Chaturthi 2023: விழுப்புரம்: நவதானியங்களைக் கொண்டு விநாயகர் ஓவியம் வரைந்து அசத்திய பெண்...