மின் கட்டணம் 5 ஆயிரம் வந்ததால் விழுப்புரத்தில் பொதுமக்கள் அதிர்ச்சி

500 ருபாய் வந்த மின் கட்டணம் 5 ஆயிரம் வந்ததால் விழுப்புரத்தில் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Continues below advertisement

விழுப்புரம்: விழுப்புரம் நகர பகுதியான ஜிஆர்பி தெருவிலுள்ள குடிசை வீடுகளில் புதியதாக பொருத்தப்பட்ட  மின் மீட்டர்களால் 500 ரூபாய் வந்த மின் கட்டணம் ரூ.5 ஆயிரம் வந்துள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 

Continues below advertisement

விழுப்புரம் நகர பகுதியான ஜிஆர்பி தெருவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கூரை வீடு, ஓட்டு வீடுகளில் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்  மின்வாரிய சார்பில் வீட்டிலிருந்த பழைய மின் மீட்டர்களை எடுத்துவிட்டு புதிய மின் மீட்டர்களை பொருத்தி விட்டு சென்றனர். புதிய மின் மீட்டர்கள் பொருத்தப்பட்ட பிறகு ஒரே ஒரு மின் விசிறி இரண்டு டியூப் லைட்டுகள் பயன்படுத்தப்பட்ட குடிசை வீடுகளில் மின் கட்டணம் 500 ரூபாய் கட்டியவர்களுக்கு இந்த மாதம் 4 ஆயிரத்திலிருந்து 5 ஆயிரமாக மின்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மின் வாரியத்திடம் புகார் அளித்தும் மின் வாரிய ஊழியர்கள் சரியான பதில் அளிக்கவில்லை என்றும் 500 ரூபாய் மின் கட்டணம் கட்டிய நாங்கள் எப்படி 5 ஆயிரம் கட்டணம் கட்ட முடியும் என்பதால் மின் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் 300 ரூபாய் மின் கட்டணம் செலுத்தியவர்களுக்கு சுமார் 2000 லிருந்து 3000 ரூபாய் வரை மின்கட்டணம் நிர்ணயத்தில் உள்ளதாக வேதனையுடன் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் மின் கட்டணம் தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement