விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கிளியனூர் பகுதி உள்ளது. இங்கு புதுச்சேரி- திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் மதுவிலக்கு அமலக்கபிரிவு சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள், சாராயம் கடத்தலை தடுக்கும் வகையில் 24 மணி நேரமும் போலீசார் சுழற்சி முறையில் பணியில் இருப்பார்கள். மேலும், போக்குவரத்து விதி மீறல் தொடர்பான வழக்குகளை பதிவு செய்யும் இ-செலான் கருவி மூலமும் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த நிலையில் இரவு 11.30 மணி அளவில் கிளியனூர் காவலர்கள் திருஞானம், கார்த்தி ஆகியோர் சோதனை சாவடியில் பணியில் இருந்தனர்.


அப்போது, போக்குவரத்து விதி மீறியவர்களிடம் இ-செலான் கருவி மூலம் அபராதம் விதித்துக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி ஒரு இருசக்கர வாகனம் வேகமாக வந்தது. அதில் வந்த 2 பேரும் ஹெல்மெட் அணிந்திருந்தனர். இதை பார்த்த காவலர்கள், இருசக்கர வாகனத்தை நிறுத்துமாறு சைகை காண்பித்தனர். உடனே இருசக்கர வங்கத்தை ஓட்டி வந்த நபர், வாகனத்தின் வேகத்தை குறைத்து சாலையோரத்தில் நிறுத்துவது போன்று வந்தார். அப்போது அவர்கள், திடீரென திருஞானம் கையில் வைத்திருந்த இ-செலான் கருவியை பறித்துக்கொண்டு வாகனத்தில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டனர்.


இதனால் காவலர்கள் இருவரும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துபோய் நின்றனர். இது பற்றி அவா்கள், தங்களது உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் அடுத்தடுத்த காவல் நிலையங்களில் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். ஆனால் இ-செலான் கருவியை பறித்துச்சென்ற மர்மநபர்கள் சிக்கவில்லை. இதற்கிடையே தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும் சோதனை சாவடியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் 2 மர்மநபர்கள், இ-செலான் கருவியை பறித்த காட்சி பதிவாகி இருந்தது. இருவரும் ஹெல்மெட் அணிந்திருந்ததால் முகம் சரியாக தெரியவில்லை. ஆனால், அந்த இருசக்கர வாகன பதிவெண் தெளிவாக தெரிந்தது. அந்த எண்ணை வைத்து அவர்கள் யார், எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




உங்கள் கண்முன்னே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்கத் தயக்கமாக இருக்கிறதா? காலங்காலமாக மாறவே மாறாத ஒன்றை, நாம் என்ன மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று மலைப்பாக இருக்கிறதா?


என்ன செய்ய வேண்டும்?


நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.