புதுச்சேரியில் புதிய வகை கொரோனா கண்டறியும் பரிசோதனை அடுத்த மூன்று தினங்களில் புதுச்சேரியில் தொடங்கும் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் கூறுகையில், “புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு ஏதும் இல்லை எனவும் வரும் புதிய ஆண்டு கொரோனா இல்லாத ஆண்டாக இருக்க வேண்டும். வரும் புதன்கிழமையில் இருந்தும் கொரோனா வகைகளை கண்டறியும் வசதி ஏற்படுத்தப்படவுள்ளது. கூட்டமாக இருக்கும் இடங்களில் கவனமாக இருக்க வேண்டும் எல்லாவகையிலும் எச்சரிக்கையாக உள்ளது இருப்பினும் எதையும் எதிர்கொள்ள புதுச்சேரி அரசு தயாராக உள்ளது.


கொண்டாட்டங்களில் மிக கவனமாக முககவசம் அணிய வேண்டும் கொண்டாட்டங்களில் கட்டுப்பாடு ஏதும் இல்லை எனவும் புதுச்சேரிக்கு ரூ.1400 கோடி மத்திய அரசு உதவி அளிக்கவுள்ளதுபொங்கல் பொருட்கள் இலவசாமக வழங்கும் ஒப்புதல் வழங்கியிருகின்றேன் வேறுமாடல் ஆட்சி புதுச்சேரிக்கு தேவையில்லை. புதுச்சேரியில் இருந்து திருப்பதிக்கு விமான சேவை தொடங்கவுள்ளது, மேலும் புதுச்சேரியில் எல்லாம் மக்கள் நலன் காப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. ஏழை மாணவர்களும் பயனளிக்கும் வகையில் தான் சி.பி.எஸ்.சி பாடத்திட்டம் அமையப்போகின்றது இதில் எழும் வதந்திகளுக்கு இடமில்லை.


மாநில அந்தஸ்து விவகாரம் எனக்கு நன்றாக தெரியும், மாநிலத்திற்கான அனைத்து திட்டங்களும் யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கும் கிடைக்கும், சி.பி.எஸ் பாடத்திட்டத்தில் தமிழ் கட்டாயம் இருக்கும் தமிழை தமிழிசை நசுக்குகின்றார் என்பதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். இந்த விவகாரத்தை அரசியாலாக்க வேண்டாம். இப்போது மாநில அந்தஸ்த்து விவகாரம் குறித்து பேசுவோர் பாராளுமன்றத்தில் இருந்தவர்கள் ஏன் மாநில அந்தஸ்த்து கிடைக்க வழிவகை செய்யவில்லை” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.




உங்கள் கண்முன்னே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்கத் தயக்கமாக இருக்கிறதா? காலங்காலமாக மாறவே மாறாத ஒன்றை, நாம் என்ன மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று மலைப்பாக இருக்கிறதா?


என்ன செய்ய வேண்டும்?


நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.