பள்ளி கல்வி துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு  நடைபெற்ற கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா திருவிக வீதியிலுள்ள அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதல் நம்ம ஸ்கூல் பவுண்டேசனுக்கு போட்டி போட்டுக்கொண்டு நிதி அளித்த அமைச்சர்,சட்டமன்ற உறுப்பினர்கள்,நகரமன்ற உறுப்பினர்கள். இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மாவட்ட ஆட்சித்தலைவர் மோகன் அவர்கள் தலைமையில், கலைத்திருவிழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார்.


உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் கூறியதாவது:-


தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழகத்தில் 100 சதவீதம் கல்வி இலக்கினை அடைந்திடும் வகையில் கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, கல்வியோடு வேலைவாய்ப்புத்திறன், கலைத்திறன் மற்றும் விளையாட்டு உள்ளிட்டவற்றை ஏற்படுத்திக்கொடுத்திடும் வருகிறார்கள். பொருட்டு பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி பயிலும் மாணவர்கள், வெறும் கல்வியறிவு பெறுவது மட்டுமல்லாமல் கலைத்திறனையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களிடையே கலைத்திறனை வளர்த்திடும் வகையில் மாவட்டந்தோறும் கலைத்திருவிழா நடத்திட உத்தரவிட்டார்கள்.


அதனடிப்படையில் மாவட்டத்தில் பள்ளிகள் அளவில் கலைத்திருவிழா நடைபெற்றது. தமிழகத்தின் பாரம்பரிய கலைகள் குறித்து பள்ளி, மாணவ, மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் தமிழகத்தின் பாரம்பரிய மற்றும் கலாச்சாரத்தை காத்திட முடியும். அதனடிப்படையில் நடத்தப்பட்ட கலைத்திருவிழாவில் பெருமளவில் மாணவியர்கள் பங்கேற்று நமது பாரம்பரிய மற்றும் கலாச்சார நடனங்களை ஆடுவது மனதிற்கு மட்டடற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளின் தரத்தினை உயர்த்திட வேண்டும் என்ற நோக்கத்தில் "நம் பள்ளி” திட்டத்தினை தொடங்கி வைத்தார்கள். முன்னாள் மாணவர்கள் தாங்கள் பயின்ற அரசு பள்ளிகளை தத்தெடுத்து பள்ளி மேம்பாட்டிற்காகவும் மற்றும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித்தேவைக்கும் உதவ முடியும். இதன் மூலம், பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் மாணவர்களின் கல்வி கற்பதற்கு தேவையான கல்வி உபகரணங்கள் வாங்கப்பெற்று மாணவர்களின் கல்வித்தரம் மேம்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாக இத்திட்டம் அமைந்திடும்.


தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கிராமப்புறங்களில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவிகள் உயர்கல்வி கற்றிட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவியர்களுக்கு "புதுமைப்பெண்” திட்டத்தின்கீழ் மாதந்தோறும் ரூ.1,000/- வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தியுள்ளார்கள். அதன்படி, மாவட்டத்தில் 4,500-க்கும் மேற்பட்ட மாணவியர்கள் பயன்பெற்று வருகின்றனர்.


மேலும், அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் உயர்கல்வி கனவினை நிறைவேற்றிடும் வகையில், உயர்கல்வியில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டினை அறிவித்தார்கள். இதன் மூலம், பல்லாயிரக்கான மாணவர்கள், மருத்துவத்துறை, பொறியியில், தொழில்நுட்பக்கல்வி, செவிலியர்கல்வி, கலை கல்லூரி போன்றவற்றில் இடஒதுக்கீடு பெற்று கல்வி பயின்று வருவதோடு மட்டுமல்லாமல் கல்விக்கட்டணம், விடுதிக்கட்டணம் ஏதுமின்றி கல்வி கற்று வருகிறார்கள்.


தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாணவ, மாணவியர்கள் கல்வி பயின்று வருங்காலத்தில் சிறப்பானதொரு தமிழகத்தினை உருவாக்கிட வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுத்தி வருகிறார்கள். மேலும், கல்வியறிவோடு விளையாட்டு மற்றும் கலைத்திறனையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். இன்றைய தலைமுறையினராகிய நீங்கள் நாளைய தமிழகத்தின் எதிர்காலம். எனவே, தமிழக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களை நல்லமுறையில் பயன்படுத்தி தங்களை மேம்படுத்திக்கொள்வதோடு, தாங்கள் பயின்ற பள்ளிக்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.


நம்ம ஸ்கூல் பவுண்டேஷனுக்கு அமைச்சர் பொன்முடி 4 லட்சம், திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி 3 லட்சமும், லட்சுமணன் 2 லட்சத்து 10 ஆயிரமும் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன் 2 லட்சம், திமுக நகரமன்ற தலைவி தமிழ்ச்செல்வி பிரபு ஒரு லட்சம் ரூபாயும், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவி ஷீலா தேவி 1 லட்சமும், ஆட்சியர் மோகன் ஒரு லட்சம் முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்னபிரியா 70 ஆயிரம் ரூபாயும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜ் ஒரு லட்சமும், முன்னாள் நகர மன்ற தலைவர் ஜனகராஜ் 2 லட்சம் என  போட்டி போட்டு கொண்டு அறிவித்தனர். மொத்தம் ரூ.21.80 இலட்சம் "நம் பள்ளி” திட்டத்திற்காக விழுப்புரம் மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.