விழுப்புரம்: விழுப்புரம் அருகேயுள்ள பம்பை ஆற்றில் குளிக்க சென்ற இரண்டு பள்ளி மாணவர்கள் ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் அருகேயுள்ள அய்யன் கோவில்பட்டு கிராமத்தில் வழியாக செல்லும் பம்பை ஆற்றின் தடுப்பணையில் குளிப்பதற்காக  பானம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் உதயா(13), விழுப்புரத்தை சார்ந்த பாலசுப்ரமணியன்(16), சங்கர்(14), கிஷோர், பாலா, அஜித் ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது ஆற்றின் ஆழப் பகுதிக்கு சென்று குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென ஆறு பேரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.


ஆற்றில் குளிக்க சென்று உயிரிழந்த சம்பவம்:


ஆற்றில் குளித்து தப்பிய நான்கு மாணவர்கள் ஆற்றிலிருந்து வெளியே வந்து காப்பாத்துமாறு கத்தியுள்ளனர். இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் தீயனைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் விரைந்து வந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்ட உதயா பாலசுப்பிரமணியனை தேடும் பணியில் ஈடுபட்டனர். மூன்று மணி நேர தேடலுக்கு பிறகு உதயா, பாலசுப்பிரமணியன் ஆகியோரின் உடலை போலீசார் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பள்ளி மாணவர்கள் ஆற்றில் குளிக்க சென்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.




தென்பெண்ணை, பாம்பை, சங்கராபரணி ஆற்றில் குளிப்பது மற்றும் செல்பி எடுக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம்:  பலத்த மழையின் காரணமாக அனைத்து அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அணையிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. திறந்து விடப்பட்ட நீர் தென்பெண்ணை, பம்பை, சங்கராபரணி ஆற்றில் விழுப்புரம் மாவட்டத்தில் கண்டாச்சிபுரம், திருவெண்ணெய்நல்லுார் மற்றும் விழுப்புரம் தாலுகாக்களில் அமைந்துள்ள கரையோர கிராமங்களின் வழியாக செல்கிறது. தென்பெண்ணை, பம்பை  ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க ஒலிபெருக்கி மூலம் விளம்பரம் செய்யப்பட்டது. இதனையும் மீறி ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் குடும்ப உறுப்பினர்களுடன் ஆற்றில் குளிப்பது, பள்ளி மாணவ, மாணவிகள் செல்பி எடுக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே, இந்த செயல்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.




உங்கள் கண்முன்னே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்கத் தயக்கமாக இருக்கிறதா? காலங்காலமாக மாறவே மாறாத ஒன்றை, நாம் என்ன மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று மலைப்பாக இருக்கிறதா?


என்ன செய்ய வேண்டும்?


நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.