விழுப்புரம் : இருளர் சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட இலவச மனைக்கு பட்டா வழங்ககோரி இருளர்கள் விழுப்புரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு ஆவணங்களை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


விழுப்புரம் அருகேயுள்ள ஆனாங்கூர் கிராமத்தில் 30 க்கும் மேற்பட்ட இருளர் சமூகத்தை சார்ந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் இருளர் சமூகத்தினர் 30 குடும்பங்களுக்கும் அதே பகுதியில் இலவச வீட்டு மனை வழங்குவதற்கு தமிழக அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு கடந்த ஒன்னரை ஆண்டுகளுக்கு முன் வீட்டுமனைகள் வழங்கப்பட்டன. அதன் பின்னர் 6 குடும்பங்களுக்கு மட்டுமே வீட்டு மனைக்கான பட்டாவினை வழங்கிய அரசு அதிகாரிகள் மீதமுள்ள குடும்பங்களுக்கு பட்டா வழங்காமல் இருப்பதால் பாதிக்கப்பட்டவர்கள் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகார் மீதும் நடவடிக்கை எடுக்காததால் இருளர் சமூகத்தை சார்ந்த 24 குடும்பத்தினர் விழுப்புரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பட்டா வழங்ககோரி அரசு ஆவணங்களான குடும்ப அட்டை, ஆதார் அட்டை , மகாத்மா ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்ட அடையாள அட்டையினை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து வருவாய் வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கலைந்து சென்றனர்.


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண