விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் நெடிமோழியனூரில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் உள்ள  மாணவர்கள் சுமார் 4 கிலோமீட்டர் தூரம் உள்ள நீலதொட்டி அரசு பள்ளிக்குச் சென்று படித்து வருகின்றனர். இதனால் மாணவர்களுக்கு நேரமின்மை, மன உளைச்சல் ஏற்படுவதுடன், கல்வி கற்பதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே நெடிமோழியனூர் கிராமத்தில் அரசு பள்ளி அமைக்க வேண்டுமென பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து அதிகாரிகளிடம் மனு அளித்தனர். இந்த நிலையில் தற்போதைய கல்வியாண்டில் நெடிமோழியனூர் கிராமத்தில் அரசு ஆரம்ப பள்ளி தொடங்கப்படும் என்று கிராம மக்கள் எதிர்பார்த்திருந்தனர்.


ஆனால், அதற்கான அறிவிப்புகள் ஏதும் தற்போது வரவில்லை. இந்தகிராம மாணவர்கள் மீண்டும் நீலதொட்டி அரசு பள்ளிக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள், மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல், நெடி மோழியனூரில் உள்ள குழந்தைகள் மையத்தில் எதிரில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கல்வித் துறை அதிகாரிகள்  நெடி மோழியனூர் கிராமத்தில் அரசு ஆரம்ப பள்ளி தொடங்க உத்தரவாதம் அளித்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என்றும் அதுவரை மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப போவதில்லை என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். தங்கள் கிராமத்தில் அரசு ஆரம்ப பள்ளி தொடங்க வேண்டுமென கிராம மக்கள் போராட்டம் நடத்துவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண