விழுப்புரம் மாவட்டம் கானை ஊராட்சிக்குட்பட்ட கொசப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவரான பிரகாஷ்  தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு திமுகவில் இணைந்து செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் கிராமத்தில் உள்ள 16 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்கள் மீட்கப்பட்ட நிலையில் அப்பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் பிரகாஷ் ஏற்ப்பாட்டில் 5000 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அமைச்சர்களான ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ‌.பெரியசாமி, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கொசபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பிரகாஷ் புறக்கணிக்கப்பட்டதாகவும், மழையால் சேதம் அடைந்த வீடுகளுக்கு மாற்று வீடு வழங்க மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது தொடர்பாகவும், மேலும் கிராம வளர்ச்சிக்கான பல்வேறு கோரிக்கை மனுக்களை அமைச்சரிடம் கொடுக்க முற்பட்டபோது விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி அவரை தள்ளி விட்டதாகவும் கூறப்படுகிறது.


தான் புறக்கணிக்கப்பட்டதால் மன வேதனை அடைந்த கொசபாளையம் திமுக ஊராட்சி மன்ற தலைவர் பிரகாஷ நேற்று அக்கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்து வந்த கஞ்சனூர் காவல் ஆய்வாளர் சேகர் ஊராட்சி மன்ற தலைவர் இடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை கீழே இறங்கி வர செய்தார். இதனால் கொசப்பாளையம் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.


 




என்ன செய்ய வேண்டும்? 




நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.