விழுப்புரத்தில் இருசக்கர வாகன விபத்தில் காயம் அடைந்த பெண்ணுக்கு விழுப்புரம் (திமுக) சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் லட்சுமணன் முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், ஆட்டோவிற்கு பணம் கொடுத்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


 






 


விழுப்புரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினராக உள்ள மருத்துவர் லட்சுமணன் பணி நிமித்தமாக கோலியனூர் பகுதிக்கு சென்றுவிட்டு மீண்டும் மகாராஜபுரம் அருகே வந்தபோது விபத்து ஏற்பட்டு மக்கள் கூட்டமாக இருப்பதை அறிந்த எம்எல்ஏ லட்சுமணன் தனது காரினை நிறுத்தி சென்று பார்த்துள்ளார். அப்போது இரு சக்கர வாகனத்தில் ரமேஷ், மேரி தனது இரு பிள்ளைகளுடன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது வாகன விபத்து ஏற்பட்டு காயங்களுடன் நின்றிருந்துள்ளனர். இதனைகண்ட எம்எல்ஏ லட்சுமணன் உடனடியாக காயமடைந்த மேரிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து கையில் கட்டு போட்டு அருகிலுள்ள் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளார். விபத்தில் பெண் ஒருவர் அடிப்பட்டு இருந்ததால் தான் ஒரு மருத்துவர் என்ற அடிப்படையில் எம்எல்ஏ லட்சுமணன் முதலுதவி சிகிச்சை அளித்த சம்பவம் அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




என்ன செய்ய வேண்டும்? 




நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.