கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மேல்குமாரமங்கலத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், கடலூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.சி.சம்பத்திடம், அதே பகுதியை சேர்ந்த குமார் என்பவர், உதவியாளராக இருந்து வந்தார். பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதன்பிறகு குமார், எம்.சி.சம்பத்திடம் வேலைக்கு செல்லவில்லை.

 

இதற்கிடையே முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்தின் சகோதரர் எம்.சி.தங்கமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் குமாரின் மாமனார் ராமச்சந்திரன், மாமியார் ஜோதி ஆகியோரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் பண்ருட்டி காவல்துறையினர் எம்.சி.சம்பத், எம்.சி.தங்கமணி உள்ளிட்ட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரன், ராதா ஆகியோரை கைது செய்தனர். இந்த நிலையில், எம்.சி.சம்பத் சார்பில் அவரது வக்கீல் மாசிலாமணி கடலூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

 

இந்த நிலையில் கடலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் முன் ஜாமின் மீதான விசாரணை நடைபெற்ற நிலையில் முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத்திற்கு முன்ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

 

 



 


என்எல்சி  கேண்டின் உணவில் எலி-ஊழியர்களுக்கு வாந்தி மயக்கம் மருத்துவமனையில் அனுமதி.

 



 

 

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் உள்ளது, நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் உள்ள, இரண்டாவது சுரங்கத்தில், இன்று காலை 6 மணி ஷிப்டிற்கு, வழக்கம் போல் தொழிலாளர்கள் வேலைக்கு சென்றுள்ளனர். 

 

காலை வேலைக்குச் சென்றவர்கள், காலை உணவு சாப்பிடுவதற்காக, இரண்டாவது சுரங்கத்தில் உள்ள பழைய கேண்டினில், சாப்பிட்டு உள்ளனர்.காலை சாப்பாடாக, நெய்வேலி என்.எல். சி நிர்வாகம் தொழிலாளர்களுக்கு, தயிர் சாதமும் வடையும் கொடுத்துள்ளது.

 

அப்போது தொழிலாளர்கள் சாப்பிட்ட, தயிர் சாதத்தில், எலி செத்து கிடந்ததை கண்டு, தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள், கேண்டீன் நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர்.

 

அதற்குள் ஏற்கனவே, டிபன் சாப்பிட்டு, முடித்த தொழிலாளர்கள் சுமார் 19-பேருக்கு வாந்தி, தலைச்சுத் தல் ஏற்பட்டு, கேண்டீன் முன்பே மயங்கி கீழே விழுந்துள்ளனர்.இதனைப் பார்த்த சக தொழிலாளர்கள், அவர்களை மீட்டு, என்எல்சி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிகிச்சையில் சேர்த்துள்ளனர்.

 

இச்சம்பவத்தில் இன்கோசர்வ் தொழிலாளி 10 பேரும், சூப்பர்வைசர் இரண்டு பேரும், ஒப்பந்த தொழிலாளி 7 பேர் என 19 தொழிலாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில், கோடிக்கணக்கில் லாபம் ஈட்டும், நெய்வேலி என்எல்சி நிர்வாகம், தொழிலாளர்களுக்கு தரமான உணவுகள் வழங்கவில்லை எனவும், இனிவரும் காலங்களில் தரமான உணவுகள் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.