விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மாற்றுதிறனாளிகள் தினத்தினை முன்னிட்டு பிங்க நிற வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது.
மாற்றுத்திறனாளிகளின் பிரச்னைகளையும் அவர்களின் உரிமைகளையும் பேசுவதற்கான தினமாக டிசம்பர் மூன்றாம் தேதியினை ஒவ்வொரு ஆண்டும் மாற்றுதிறனாளிகள் தினமாக ஐநா சபையால் அறிவிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மாற்றுதிறனாளிகள் தினத்தன்று தமிழக அரசு சார்பில் மாற்றுதிறனாளிகள் கவுரவிக்கப்பட்டு பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் மாற்றுதிறனாளிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாற்றுதிறனாளிகள் தினத்தினை முன்னிட்டும் மாற்றுதிறனாளிகளின் வளர்ச்சியை பெருமைபடுத்தும் விதமாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் முதன் முறையாக பிங்க நிற வண்னவிளக்குகளால் அலங்கரிக்கபட்டு மிளிரச்செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆட்சியர் அலுவலகம் வளாகம் முழுவதுக் பிங்க் நிறத்தில் மளிருவது அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது. குடியரசுதினம், சுதந்திரதினத்தன்று மட்டும் வண்ண விளக்குகளாம் மிளிரும் ஆட்சியர் அலுவலக வளாகம் மாற்றுதிறனாளிகள் தினத்தினை முன்னிட்டும் பிங்க நிற விளக்குகளால் ஒளிரச்செய்துள்ளது மாற்றுதிறனாளிகளிடையே வரவேற்பினை பெற்றுள்ளது.
ஒத்திவைக்கபட்ட உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா
உலக மாற்றுத்திறனாளிகள் தினம், ஆண்டுதோறும் டிசம்பர் மூன்றாம் நாள் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, டிசம்பர் இரண்டாம் தேதி காலை 10.30 மணியளவில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா, விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கும் விழா. மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற இருந்தது.
இந்த நிலையில், புயல், கனமழை எச்சரிக்கை காரணத்தினால் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தற்போது, இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் டிசம்பர் 2 முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை சென்னையில் புயல், கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக, டிசம்பர் 2-ஆம் தேதி முதல்வர் தலைமையில் நடைபெற இருந்த உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுகிறது. இந்த விழா நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.