வள்ளலாரின் 200-வது ஆண்டு முப்பெரும் விழாவினை முன்னிட்டு, வள்ளலாரின் அருள்நெறி பரப்புரை பேரணியினை மாவட்ட ஆட்சியர் மோகன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில், இந்து சமய அறநிலைத்துறை சார்பில், வள்ளலாரின் 200-வது ஆண்டு முப்பெரும் விழாவினை முன்னிட்டு, வள்ளலாரின் அருள்நெறி பரப்புரை பேரணியினை மாவட்ட ஆட்சியர் மோகன் துவக்கி வைத்தார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில்,
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரையின்படி, வள்ளலார் பெருமான் பூமிக்கு வருவிக்கவுற்ற இருநூற்றாண்டு, ஏழைகளின் பசிப்பிணியைப் போக்க அவர் சத்திய தருமச்சாலையை தொடங்கிய 155-வது ஆண்டு மற்றும் தனிப்பெருங்கருனை தெய்மான அருட்ஜோதி ஆண்டவரை தரிசனம் காட்டிவித்த 152-வது ஆண்டு ஆகியவற்றிற்கான முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில் முப்பெரும் விழா ஒருநாள் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடக்கமாக வள்ளலாரின் அருள்நெறி கருத்துக்களை பொதுமக்களிடம் எடுத்துச் செல்லும் விதமாக சமரச சுத்த சன்மார்க்கத்தினைச் சேர்ந்தவர்கள்.
கல்லூரி மாணவ, மாணவியர்கள் என 700-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட அருள்நெறி பரப்புரை பேரணி மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. இப்பரப்புரை பேரணி நான்குமுனை சந்திப்பு, வீரவாழியம்மன் கோவில் தெரு, கே.கே.ரோடு, சுதாகர் நகர் உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிவழியாக சென்று புதிய பேருந்து நிலையம் அருகில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் நிறைவடைந்தது. எனவே, பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் அனைவரும் வள்ளலார் அவர்களின் அருள்நெறி கருத்துக்களை நாம் பின்பற்றுவது மூலம், வாழ்வில் சஞ்சலமில்லாத மனதோடு இன்பமான வாழ்வினை நாம் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் மோகன் அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.இலட்சுமணன், இந்து சமய அறநிலைத்துறை இணை இயக்குநர் சிவக்குமார், உதவி ஆணையர் விஜயராணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
என்ன செய்ய வேண்டும்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்