Ulundurpet Bus Accident: கள்ளக்குறிச்சி அருகே ஆம்னி பேருந்து - லாரி விபத்து..! ஓட்டுனரின் அஜாக்கிரதை காரணமா?

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை புறவழிச் சாலையில் தனியார் ஆம்னி பேருந்து மாடுகள் ஏற்றிச் சென்ற லாரி மீது மோதிய விபத்தில் பேருந்தில் பயணம் செய்த இருவர் உயிரிழப்பு

Continues below advertisement

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை புறவழிச் சாலையில் தனியார் ஆம்னி பேருந்து எருமை மாடுகள் ஏற்றிச் சென்ற லாரி மீது மோதிய விபத்தில் பேருந்தில் பயணம் செய்த இருவர் உயிரிழப்பு, இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் லாரியில் கொண்டு செல்லப்பட்ட நான்கு மாடுகளும் இறந்தது இதனால் அப்பகுதி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு.

Continues below advertisement

சென்னையில் இருந்து 35 மேற்பட்ட பயணிகளுடன் தனியார் ஆம்னி பேருந்து ஒன்று மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்தது, அந்த பேருந்தை திருநெல்வேலியைச் சேர்ந்த தவமணி என்பவர் ஓட்டி சென்றுள்ளார் இந்த தனியார் ஆம்னி பேருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் தனியார் பால் பண்ணை அருகே சென்று கொண்டிருந்தபோது ஓட்டுனரின் அஜாக்கிரதையால் முன்னாள் ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு மாடுகளை ஏற்றுக்கொண்டு சென்று கொண்டிருந்த லாரி மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

2பேர் உயிர்ழப்பு

இந்த விபத்தில் தனியார் ஆம்னி பேருந்தில் இடது புறத்தில் பயணம் செய்த ஒரு ஆண் ஒரு பெண் என இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.  இதே போல விபத்தில் சிக்கிய லாரியில் கொண்டு செல்லப்பட்ட மாடுகளில் 4 மாடுகள் அடுத்தடுத்து உயிரிழந்தது. விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த  உளுந்தூர்பேட்டை போலீசார் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து உயிர் இழந்தவர்களின் சடலங்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

போலீஸ் விசாரணை :

மேலும் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் யார் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த விபத்தால் 2 மணி நேரத்திற்கு மேலாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உளுந்தூர்பேட்டை நகராட்சி வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. தொடர்ந்து லாரியில் மீதம் உள்ள மாடுகளை பத்திரமாக மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

 


என்ன செய்ய வேண்டும்? 

நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

 

Continues below advertisement