விழுப்புரம்: இலவச மனை பட்டா, சாதி சான்றிதழ் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி நரிக்குறவர் சமுதாயத்தினர் விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வாயிலில் குடும்ப அட்டை , வாக்காளர் அட்டையை வீசி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 


விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 2வது வார்டு பகுதியிலுள்ள  எம்ஜிஆர் நகர் பகுதியில் 20க்கும் மேற்பட்ட நரிக்குற சமுதாயத்தை சார்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் இவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, சாதி சான்றிதழ், மின்சார வசதிகள் வழங்கப்படாமல் உள்ளதால் அதனை செய்து தரக்கோரி நரிக்குற சமுதாயத்தினை சார்ந்தவர்கள் விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வாயிலில் ஆதார்கார்டு வாக்காளர் அடையாள அட்டையை, குடும்ப அட்டையை  தரையில்  வீசி அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இது தொடர்பாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்ல அறிவுறுத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர். நரிக்குறவர் சமுதாயத்தை சார்ந்தவர்கள் ஆட்சியர் அலுவலக வாயிலில் குடும்ப அட்டை, ஆதார் கார்டை வீசி தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


இது தொடர்பாக நரிக்குறவர் ஒருவர் கூறுகையில், “நாங்கள் வசிக்கும் பகுதியில் எந்த அடிப்படை வசதியும் இல்லை, நீண்ட காலமாக நாங்கள் கேட்டு வரும் வீட்டுமனை பட்டா, ஜாதி சான்றிதழ் உள்ளவற்றை வழங்காமல் எங்களை தனிமைப்படுத்துகின்றனர். மேலும் தேர்தலின் போது விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி எங்களிடம் ஓட்டு கேட்டு வந்தனர். அப்பொழுது அனைத்து பிரச்சனையும் தீர்த்து தருவதாக கூறியிருந்தார். ஆனால் தேர்தல் முடிந்த பின் நாங்கள் சென்று கேட்டால் எந்த பதிலும் சொல்லாமல் எங்களை புறக்கணித்து செல்கிறார்” என வேதனையுடன் தெரிவித்தார்.


 




என்ன செய்ய வேண்டும்? 




நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.