விழுப்புரம்: விழுப்புரத்தில் இளம்பெண்ணிடம் பிசியோதெரபி மருத்துவர் தகாத முறையில் நடந்து கொள்வதாக கூறி இளம்பெண்ணின் உறவினர்கள் அவரை தர்மஅடி கொடுத்து தாக்கிய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

 

விழுப்புரம் மாவட்டம் ஆனாங்கூர் பகுதியை சார்ந்த கல்லூரி மாணவி விழுப்புரம் நகர பகுதியில் இயங்கி வரும் பிசியோதெரபி மருத்துவமனையில் இடுப்பு வலிக்காக சிகிச்சை பெற சென்றுள்ளார். சிகிச்சைக்காக சென்ற இளம்பெண்ணிடம் பிசியோதெரபி மருத்துவர் கால் பகுதியை தொட்டு எங்கு வலி இருப்பதாக கேட்டுள்ளார். அப்போது அந்த இளம்பெண் தொடை பகுதியில் ஏன் கை வைக்கிறீர்கள் என கேட்டு மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.

பெண்ணிடம் சில்மிஷம் செய்த மருத்துவர் 


உடனே மருத்துவர் எங்கே வலி இருக்கிறது என அறிந்து கொள்ளவே கை வைத்து பார்த்ததாக தெரிவித்தபோது தகாத முறையில் மருத்துவர் நடந்து கொள்வதாக கூறி கூச்சலிட்டு மருத்துவமனையில் இளம் பெண் சண்டையிட்டுள்ளார். இதனையடுத்து இளம்பெண் தனது உறவினர்களுக்கு செல்போனில் அழைப்பு விடுத்து மருத்துவமனைக்கு வரவழைத்து மருத்துவருக்கு தர்ம அடி கொடுத்து தாக்கியுள்ளனர். இதனையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததின் பேரில் விரைந்து வந்து தர்ம அடி வாங்கிய மருத்துவரை மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதித்துள்ளனர்.

வழக்கு பதிவு 


இதனை தொடர்ந்து இச்சம்பவம் குறித்து போலீசார் செய்து வருகின்றனர். இளம்பெண்ணிடம் பிசியோதெரபி மருத்துவர் தகாத முறையில் நடந்து கொள்வதாக கூறி இளம்பெண்ணின் உறவினர்கள் பிசியோதெரபி மருத்துவருக்கு தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. பெண் அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீசர் பிசியோதெரபி மருத்துவர் மீது பெண்கள் மீது பாலியல் ரீதியில் தொடுதல் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவது என்ற இரு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.