நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் அதிகளவில் குளிர்பானங்கள், பழங்கள் சாப்பிடுவதில ஆர்வம் காட்டி வருகிறார்கள். மேலும் இயற்கையான பாரம்பரிய ஜூஸ் ரகங்கள் பருகுவதிலும், இயற்கை உணவுகளை சாப்பிடுவதிலும்  ஆர்வம் காட்டி வருகின்றனர்.


விழுப்புரத்தில்  சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் வேல்முருகன் என்ற இளைஞரின் இயற்கை பொருட்களால் ஆன ஜூஸ் கடை அமைந்துள்ளது. உணவே மருந்து  என்ற முன்னோர்களின் வழிமுறையின் படி இந்த ஜூஸ் கடை செயல்பட்டு வருகிறது. கடையின் உரிமையாளரான சக்திவேல் (வயது 34)  டிப்ளமோ எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் படித்து முடித்துள்ளார். அனைவருக்கும் முடிந்தவரை இயற்கையான உணவு அளிக்க வேண்டும் என்பதே இவருடைய நோக்கம் எனவும், தொடக்கத்தில் இந்த இயற்கை உணவகம் அமைப்பதற்கு பல தோல்விகளையும், கஷ்டங்களையும் கடந்து வந்து தற்போது வெற்றிகரமாக  இயற்கை உணவகத்தை நடத்தி வருவதாக தெரிவித்தார்.




இங்கு இயற்கை முறைப்படி ஜூஸ் வகைகள் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது உடலுக்கு நன்மை செய்யக்கூடிய சத்து நிறைந்த, நம் முன்னோர்கள் சாப்பிட்ட அனைத்து ரகமும் இங்கு உள்ளது. இதனை வாங்குவதற்காக காலை 6:30 மணி முதலே வாடிக்கையாளர்கள் வரத்தொடங்குகிறார்கள். இக்கடையில் 30 வகையான ஜூஸ் வகைகள் உள்ளது. கற்றாழை ஜூஸ், வெண்பூசணி ஜூஸ், தூதுவளை ஜூஸ், பீட்ரூட் ஜூஸ், கேரட் ஜூஸ், மல்டி ஜூஸ், நெல்லிக்காய் ஜூஸ், வாழைப்பூ ஜூஸ், வாழைத்தண்டு ஜூஸ், அருகம்புல் ஜூஸ், பீர்க்கங்காய் ஜூஸ், புடலங்காய் ஜூஸ், கோவக்காய் ஜூஸ் போன்ற பல வகைகளில் ஜூஸ் விற்பனை செய்யப்படுகிறது.




கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் உடம்பில் உள்ள பிரச்சனை களைகேட்டு அதற்கு ஏற்றாற்போல ஜூஸ் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த கடை 6:30 மணி 10:30 மணி வரை இயங்குகிறது. கற்றாழை ஜூஸ் 30 ரூபாய்க்கும் கேரட் பீட்ரூட் போன்றவை 50 ரூபாய்க்கும், மல்டி ரக ஜூஸ் 90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதிக அளவில் பொதுமக்கள் செவ்வாழை ஜூஸ் மற்றும் மல்டி ஜூஸ் அதிகளவில் விற்பனையாகிறது. மேலும் இங்கு பயன்படுத்தப்படும் மூலிகை தாவரங்கள் காய்கறிகள் அனைத்தும் ஒவ்வொரு பகுதியில் இருந்து கொண்டு வரப்படுகிறது.




முதலில் அதிகளவில் பொதுமக்களுக்கு இந்த மூலிகை மற்றும் இயற்கை உணவுகள் பற்றிய ஆர்வம் இல்லை விழிப்புணர்வும் இல்லை. தற்போது ஒரு சில மாற்றங்கள் பொதுமக்களின் மத்தியில் ஏற்பட்டுள்ளது எனவே அவர்கள் இது போன்ற இயற்கை உணவுகள் மற்றும் மூலிகை ஜூஸ் படித்து தெரிந்து கொள்வதற்கு அதிக அளவில் ஆர்வம் காட்டுகிறார்கள். பொதுமக்களுக்கு முடிந்த அளவுக்கு இயற்கையான சத்து நிறைந்த உணவு அளித்தேன் என்ற நிம்மதியுடன் இருக்கிறது இந்த வேலை செய்வதில் என உரிமையாளர் சக்தி  தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண