விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியில் உள்ள வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளி ஆய்வகத்தில் இருந்த ஆசிட் கொட்டியதில் 13-09-2021 அன்று 12ஆம் வகுப்பு மாணவிகள் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.


இந்த பள்ளியில் உள்ள ஆய்வகம் ஒன்று நெடுஞ்சாலை விரிவாக்கம் காரணமாக இடிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த நேரத்தில் பள்ளிக்கு விடுமுறை என்பதால் அந்த ஆய்வகத்தில் இருந்த ஆய்வக பொருட்களை அகற்றாமல் இருந்துள்ளனர்.


இந்த நிலையில் 13ம் தேதி அன்று பள்ளிகள் திறந்த பின்பு சில மாணவிகள் கட்டிட இடிபாடுகளுக்கு இடையிலுள்ள ஆய்வகத்தில் இருந்து ஆசிட் உள்ளிட்ட பொருட்களை அங்கிருந்து எடுத்து கொண்டிருந்தனர். அப்போது இடிபாடுகளில் உள்ள கட்டிட கான்கிரீட் கட்டை ஒன்று அந்த ஆய்வகத்தில் வைத்து இருந்த ஆசிட் கண்ணாடி பாட்டீலின்  மீது பட்டு தெளித்து உள்ளது.  இதனால் அங்கு ஆய்வக பொருட்களை அகற்றி கொண்டிருந்த மாணவிகள் மீது பட்டுள்ளது. இதன் காரணமாக  பாமா என்கின்ற மாணவிக்கு முகம் பகுதியிலும் மற்ற மூன்று மாணவிகள் கை கழுத்து முதுகுப் பகுதிகளில் ஆசிட் காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் உடனடியாக அந்த மாணவிகளை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது.


இந்த நிலையில், விபத்தில் அதிக அளவில் பாதிக்கப்பட்ட மாணவி பாமா என்பவர் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், ’அரசு சார்பில் வழங்கும் நிதி உதவி வேண்டாம். நாங்கள் மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கிறோம். ஆசிட் கண்ணில் பட்டதால் எனக்கு கண் பாதிப்பு உள்ளது. நான் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறேன். எனவே அரசு எனக்கு அரசு வேலை வழங்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.




ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண