விழுப்புரம் : விக்கிரவாண்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தாறுமாறாக ஓடிய டிப்பர் லாரியை சினிமா பட பாணியில் போலீசார் துரத்தி சென்று பிடித்தனர்.  விக்கிரவாண்டியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிக்கு அருகே டிப்பர் லாரி ஒன்று வேகமாக திருச்சி நோக்கி வந்தது. அப்போது சுங்கச்சாவடியில் உள்ள 1-வது பாதை வழியாக அந்த லாரி தாறுமாறாக சென்றது. இதில் முன்னால் விழுப்புரம் நோக்கி சென்ற காரின் பின்பகுதியில் அந்த லாரி மோதியது. தொடர்ந்து, அதன் டிரைவர் அங்கு நிறுத்தாமல், லாரியை வேகமாக ஓட்டி சென்றார். அப்போது அந்த பகுதியில் சென்ற மோட்டார் சைக்கிள் மீதும் மோதிவிட்டு, லாரி டிரைவர் வேகமாக தப்பிச் சென்றார்.


அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் தீனதயாளன், செந்தில் ஆகியோர் தனித்தனி மோட்டார் சைக்கிள்களில் லாரியை பின்தொடர்ந்து துரத்தி சென்றனர். அதில், சுங்கச்சாவடியில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ள பாப்பனப்பட்டு அருகே சென்ற போது, தீனதயாளன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது.


இருப்பினும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உதவியுடன் போலீசார் தீனதயாளன், செந்தில் ஆகியோர் லாரியை அங்கு வைத்து மடக்கி பிடித்தனர். பின்னர், லாரியை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து விசாரித்தனர். அதில், வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள சேவாத்தூர் கிராமத்தை சேர்ந்த சிகாமணி(வயது 39) என்பதும், விழுப்புரத்தில் உள்ள மணல் குவாரிக்கு மணல் ஏற்ற சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிகாமணியை கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர். லாரி தாறுமாறாக ஓட்டியதில், மோதிய விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. சினிமா படபாணியில் மோட்டார் சைக்கிள்களில் போலீசார் துரத்தி சென்று, லாரியை மடக்கி பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


 




என்ன செய்ய வேண்டும்? 




நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.