விழுப்புரம் மாவட்டம் மயிலம் – புதுச்சேரி சாலையில் வானூர் அருகே உள்ளது கரசானூர் கிராமம். இந்தக் கிராமத்தில் உள்ள சித்தேரிப் பகுதியில் விழுப்புரத்தைச் சேர்ந்த எழுத்தாளரும் வரலாற்று ஆய்வாளருமான கோ.செங்குட்டுவன் நேற்று (ஞாயிறு) கள ஆய்வில் ஈடுபட்டார். அப்போது 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கொற்றவை சிற்பம் கண்டறியப்பட்டது.


இதுபற்றி ஆய்வாளர் கூறியதாவது:


கரசானூர் சித்தேரியில் கிடந்த நிலையில் இந்தச் சிற்பம் இருக்கிறது. உள்ளூர் மக்கள் காளி என வணங்கி வருகின்றனர். ஆனால் இது கொற்றவை சிற்பம் ஆகும். கொற்றவை வழிபாடு மிகவும் தொன்மை வாய்ந்தது. இத்தெய்வம் குறித்து தமிழ் இலக்கியங்கள் நிறைய பேசுகின்றன. குறிப்பாக சிலப்பதிகாரம் கொற்றவை குறித்த காட்சியை விரிவாக விளக்குகிறது. கரசானூரில் கண்டறியப்பட்டுள்ள கொற்றவை சிற்பம் சுமார் 5 அடி உயரமுள்ள பலகைக் கல்லில் வடிக்கப்பட்டுள்ளது. எட்டுக் கரங்களில் தக்க ஆயுதங்களை ஏந்தியும் எருமைத் தலையின் மீது நின்ற நிலையிலும்  கொற்றவை காட்சியளிக்கிறாள்.


கால்களுக்கு கீழே இருபுறமும் இரண்டு அடியவர்கள் காட்டப்பட்டுள்ளனர். வலது கரத்தின் மீது கிளி இடம்பெற்றுள்ளதும்  கொற்றவையின் பிண்ணனியில் அழகிய மானும் காட்டப்பட்டிருப்பது சிறப்பிற்கு உரியதாகும். தொன்மையான கொற்றவை சிற்பங்களில் இடம்பெற்றுள்ளவை இந்தக் கொற்றவை சிற்பத்தில் அழகாகவும் தெளிவாகவும் காட்டப்பட்டு இருப்பதாகத் தெரிவித்துள்ள மூத்த கல்வெட்டு ஆய்வாளர் எஸ்.ராஜகோபால் இந்தச் சிற்பத்தின் காலம் கி.பி.8ஆம் நூற்றாண்டு என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.


1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கொற்றவை சிற்பத்தை தூக்கி நிறுத்தி உரிய முறையில் பாதுக்காக்க வேண்டும் என்றும் கிராம மக்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது புதுச்சேரி கலை இலக்கியப் பெருமன்றம் மு.ஆதிராமன், கிராம பஞ்சாயத்து உறுப்பினர்  ரா.கஜேந்திரன், வழக்கறிஞர் சாரதி, த.புகழேந்தி, செந்தில், கோவிந்தசாமி ஆகியோர் உடனிருந்தனர்.


 




என்ன செய்ய வேண்டும்? 




நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.