விழுப்புரம் மாவட்டம், தென்னவராயன் பேட்டை, கிராமத்தை சேர்ந்தவர் அருளோக செட்டியார் மற்றும் சகுந்தலா. இந்த தம்பதியினருக்கு 8 பிள்ளைகள் 12 பேரப்பிள்ளைகள், 10-க்கும் மேற்பட்ட கொள்ளு பேரப்பிள்ளைகள் உள்ளன. நான்கு தலைமுயையை பார்த்துள்ள இந்த தம்பதியிருக்கு திருமணம் நடைபெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன.
இந்நிலையில் நூறு வயதினை கடந்து 101- வது வயதில் அடியெடுத்து வைத்துள்ள அருளோகத்திற்கும், அவரது மனைவி சகுந்தலாவுக்கும் திருமணம் செய்ய பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் முடிவெடுத்து இன்று விழுப்புரம், காமராஜர் வீதியிலுள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. 101-வது வயதில் மீண்டும் திருமணம் செய்ய வேண்டுமென பிள்ளைகள் முடிவெடுத்து நடைபெற்ற திருமணத்தில் தம்பதியினர் ஒருவருக்கொருவர் மாலை மாற்றி கொண்டு பிள்ளைகளுக்கு ஆசி வழங்கினர். இதில் குடும்பத்தினர் உறவினர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டு இந்த தம்பதியினரிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுகொண்டனர். விழுப்புரத்திலையே முதல் முறையாக 101-வது வயதில், வயதான இளம் தம்பதியினருக்கு திருமணம் நடைபெற்றது என்பது அனைவரின் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
என்ன செய்ய வேண்டும்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்